‘மே 16 மறவாமல் வாக்களிப்பீர்’: ஷாப்பிங் பைகளில் தேர்தல் விழிப்புணர்வு வாசகம் - தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தகவல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க, வணிக வளாகங்கள், கடைகளில் அளிக்கப் படும் பைகளில் விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெறும் என தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

தமிழகத்தில் ‘100 சதவீதம் நேர்மை; 100 சதவீதம் வாக்குப் பதிவு’ என்ற இலக்குடன் சட்டப் பேரவை தேர்தலை நடத்துவதற் கான ஏற்பாடுகளை தேர்தல் துறை செய்து வருகிறது. வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் வகையில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதுதொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:

தமிழகம் முழுவதும் தொடங்கப் பட்ட 363 வாக்காளர் சேவை மையங்களில், வண்ண வாக்காளர் அடையாள அட்டை கேட்டு 38 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள் ளனர். அவர்களுக்கு 15 நாட்களில் அடையாள அட்டை வழங்கப்படும். விரைவு தபாலில் வாக்காளர் அட்டை பெற விரும்புவோரும் விண்ணப்பிக்கலாம்.

பேரணி, ஊர்வலம், பொதுக் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி அரசியல் கட்சிகளிடம் இருந்து 1,100 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 90 சதவீதம் அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல் தொடர்பாக 3,200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் தொடர்பான புகார்கள் மீது அதிகபட்சம் 3 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து விவரம் தெரிவிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்யவும், புகார்கள் தொடர்பான நடவடிக்கை குறித்து ஆலோசனை வழங்கவும் தலைமைத் தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி விரைவில் தமிழகம் வருகிறார். அவரது வருகை தேதி இன்னும் முடிவாகவில்லை. மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.

தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, வணிக வளாகங்கள், கடைகளில் வழங்கப்படும் பைகளில், ‘மே 16-் தேதி வாக்களிக்க மறக்காதீர்’ என்ற வாசகம் இடம்பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, நடவடிக்கை எடுக்க மாநகராட்சி அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த முறை வாக்குப்பதிவு சதவீதம் குறைந்த பகுதிகளில் அதற்கான காரணம் குறித்து தேர்தல் துறை சார்பில் அமைக்கப்பட்ட குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

சென்னையில் ஏற்கெனவே 550 பஸ் நிறுத்தங்களில் தேர்தல் விழிப்புணர்வு விளம்பரம் வைக்கப்பட்டுள்ளது. மேலும், 100 பஸ் நிறுத்தங்களில் விளம்பரப் பலகைகள் அமைக்கப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் 1,200 பஸ் நிறுத்தங்களில் விழிப்புணர்வு விளம்பரம் உள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, வாக்குப்பதிவு நாளன்று ஐ.டி. நிறுவனங்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என தொழி லாளர் நலத்துறை மூலம் தெரிவிக் கப்பட்டுள்ளது. இதை மீறும் நிறுவனங்கள் மீது மின்னஞ்சல் மூலம் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகம் முழுவதும் ஒளிபரப் பாகும் 13 செய்தி சேனல்கள், 24 மணி நேரமும் தொடர்ந்து கண் காணிக்கப்பட்டு வருகிறது. 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் பணியாற்றும் ஓட்டுநர்கள், வாக்களிக்க வாய்ப்பு கோரி யுள்ளனர். வெளிமாவட்டத்தில் இருந்து சென்னையில் வந்து பணி யாற்றும் ஓட்டுநர்கள், பணியா ளர்களின் பெயர்களை சென் னைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்