பிரபல இதய மருத்துவர் கே.ஏ.ஆப்ரஹாம் காலமானார்

By செய்திப்பிரிவு

பிரபல இடையீட்டு இதய மருத்துவ சிகிச்சை நிபுணர் கே.ஏ.ஆப்ரஹாம் சென்னையில் காலமானார்.

பிரபல இடையீட்டு இதய மருத்துவ சிகிச்சை நிபுணர் கே.ஏ.ஆப்ரஹாம் (வயது 79). இதய மருத்துவ சிகிச்சையில் 50 ஆண்டுகள் நிபுணத்துவம் பெற்று விளங்கிய அவர், நேற்று முன்தினம் சென்னையில் காலமானார். இவர் வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முடித்தார். குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்டி, லண்டனில் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளை படித்தார்.

1971-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போர் நடைபெற்றபோது, இந்திய ராணுவத்தில் தலைமை மருத்துவராக பொறுப்பு வகித்துள்ளார். அவருடைய அர்ப்பணிப்புடன் கூடியசேவையை பாராட்டிய அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி, அவருக்கு பாராட்டுக்கடிதம் எழுதினார்.

பின்னர் 25 ஆண்டுகள் சென்னை தெற்கு ரயில்வே தலைமை மருத்துவமனையில் தலைமை மருத்துவ இயக்குநராக பணியாற்றினார்.

இதய சிகிச்சை தொடர்பான 200-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். அவரது மருத்துவ சேவையை பாராட்டி 1999-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. மத்திய ரயில்வே அமைச்சகத்தின் சிறப்பு விருது, தமிழ்நாடு டாக்டர்எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை பெற்றுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

இந்தியா

14 mins ago

இந்தியா

24 mins ago

இந்தியா

36 mins ago

கருத்துப் பேழை

29 mins ago

கருத்துப் பேழை

37 mins ago

சினிமா

3 hours ago

கல்வி

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

9 hours ago

மேலும்