ஆட்சேபகரமான புறம்போக்கு நிலங்களில் வசிப்போரை மறு குடியமர்த்தல் வரைவு கொள்கை வெளியீடு- மறுவாழ்வு, கல்வி, வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்க தமிழக அரசு நடவடிக்கை

By கி.கணேஷ்

தமிழகத்தில் அரசு புறம்போக்கு நிலங்கள், நீர்நிலைகளின் கரைகள், நீர்நிலைகள் போன்ற பல்வேறு பகுதிகள் பல ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ள சூழலில், பேரிடர் காலங்களிலும், அரசுக்கு நிலம் தேவைப்படும் நிலையிலும் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுக்கிறது. இதைத்தவிர்க்கும் வகையில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்போது, அங்கு குடியிருப்போருக்கு உரிய மாற்று இடம், வீடு தரப்பட வேண்டியுள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு இதுபோன்றஆக்கிரமிப்புகளை வரன்முறைப்படுத்தும் திட்டங்களை வருவாய்த் துறை 2 பிரிவுகளாகச் செயல்படுத்துகிறது.

ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து வசிப்பவர்களுக்கு அதே நிலத்தில், வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அதேபோல், ஆட்சேபகரமான புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமித்து குடியிருப்போரைக் கண்டறிந்து அவர்களுக்கு அதற்குப் பதிலாக வேறு அரசு நிலம் அல்லது தனியார்நிலத்தை பெற்று அதில் மறு குடிய மர்த்தம் செய்து அவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் திட்ட மும் செயல்படுத்தப்படுகிறது.

இதில், ஆட்சேபகரமான புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பைப் பொறுத்தவரை, சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அதிகளவில் கண்டறி யப்பட்டு, அங்கு குடியிருப்போரை மறு குடியமர்த்தும்பணிகள் தமிழ் நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் (குடிசை மாற்று வாரியம்) மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மறு குடியமர்த்தினால் மட்டும் போதாது, அவர்களுக்கான அடிப்படை வசதிகள், மறுவாழ்வுக்கான தேவைகளையும் ஒருங்கமைத்துத் தரவேண்டும் என்பதில் வாரி்யம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இதைக் கருத்தில் கொண்டேதற்போது ஆட்சேபகரமான புறம்போக்கு பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மறு குடியமர்த்தம் மற்றும் மறுவாழ்வுக்கான வரைவு திட்டம் ஒன்றை முதல்முறையாக வெளியிட்டு பொதுமக்களின் கருத்தைக் கேட்டுள்ளது.

அந்த வரைவுத் திட்டத்தில், முக்கியமாக ஆட்சேபகரமான புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களை மறு குடியமர்த்தம் செய்யும்போது, தேர்வு செய்யப்படும் நிலம் எப்படி இருக்க வேண்டும் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக அவர்கள் வசித்த நகரத்துக்கு மிகவும் அருகில் அதாவது 30 நிமிடங்களில் சென்று வரும் வகையில் இருக்க வேண்டும்.

ரயில், பேருந்துபோக்குவரத்து வசதி இருக்க வேண் டும். அப்படி இல்லாதபட்சத்தில் அந்தப் பகுதியில் இருந்து நகரத் துக்கு சென்று வருவதற்கான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தரவேண்டும். வனத்துறை சார்ந்த நிலமாக இருக்கக் கூடாது.

மறு குடியமர்த்தலுக்காக ஆக்கிரமிப்பாளர்களை அகற்றும் போது, அவர்களுக்கு உரிய போக்குவரத்துச் செலவு, மாதாந்திர உதவித்தொகை அளிக்க வேண்டும். தினக்கூலி பணியாளர்களுக்கு அரசு நிர்ணயித்த தொகையை 30 நாட்கள் வழங்க வேண்டும்.

சுகாதாரம், கல்வி, அடிப்படைவசதிகள்,திறன் மேம்பாடு, சமூகப்பாதுகாப்பு திட்டங்கள், வேலைவாய்ப்பு அனைத்து நலத்திட்டங்களும் ஒவ்வொரு குடும் பத்துக்கும் 2ஆண்டுகளுக்குள் சென்றுசேர வேண்டும் என்றும் வரைவு கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், மக்களின் கருத்துகளைக் கேட்டு, தனியான மறு குடியமர்த்தல் கொள்கை வெளியிடப்பட்டு, அதன்படி திட்டம் செயல்படுத்தப்படும்.

மறு குடியமர்த்தலில் பொதுமக்களுக்கு முதலில் சிரமங்கள் இருந்தாலும், காலப்போக்கில், வேலைவாய்ப்பு, கல்வி உள்ளிட்ட வசதிகள், பாதுகாப்பான சூழலும் அரசால் ஏற்படுத்தப்படுவதால், அவர்கள் வாழ்வாதாரமும் மேம்படுகிறது. அதேநேரம், நகரப்பகுதிகளும் விரிவடைகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, கடந்த ஆக.27 நிலவரப்படி, ஆட்சேபகரமான புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்துள்ள 1,77,923 குடியிருப்புகள் கண்டறியப்பட்டு, அவர்களை மறு குடியமர்த்தம் செய்வதற்கான, அரசு புறம் போக்கு நிலம் அல்லது தனியார் பட்டா நிலம் கண்டறியப்பட்டு வருகிறது.

இதற்காகவே வரன் முறைப்படுத்தும் திட்டம் நீட்டிக் கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 mins ago

சினிமா

7 mins ago

சினிமா

10 mins ago

வலைஞர் பக்கம்

14 mins ago

சினிமா

19 mins ago

சினிமா

24 mins ago

இந்தியா

32 mins ago

க்ரைம்

29 mins ago

இந்தியா

35 mins ago

தமிழகம்

57 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்