ஊரக உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த அதிமுக, பாமக வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று அதிமுக, பாமக கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்துக்கு, அதிமுக இணைஒருங்கிணைப்பாளர் பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப் பதாவது:

உள்ளாட்சி அமைப்புகளுக் கான தேர்தல் அக். 6 மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கரோனா தொற்றால் லட்சக் கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3-ம் அலையும் தொடங்கியுள்ளது. எனவே, சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றதைப்போல, உள்ளாட்சித் தேர்தலையும் ஒரே கட்டமாக நடத்தி முடிக்க வேண்டும்.

2019-ல் அதிக மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றதால் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. தற்போது 9 மாவட்டங்களில் மட்டுமே தேர்தல் நடைபெற உள்ளதால், அவ்வாறு நடத்த வேண்டிய அவசியம் இல்லை. மேலும், 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படுவது, சமூக விரோதிகள் வாக்காளர்களை மிரட்டுவதற்கு வழிவகுக்கும். எனவே, இந்த தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும்.

மேலும், பிரச்சாரம், வாக்குப்பதிவு, வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பு என அனைத்தையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும். கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும்.

பாதுகாப்புப் பணியில் மத்திய துணை ராணுவப் படையினரை ஈடுபடுத்த வேண்டும். மதுபானங்கள் பதுக்குவதை தடுத்து, நிலைகண்காணிப்புக் குழுக்கள் மூலம்வாகன சோதனை நடத்த வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

பாமக கடிதம்

மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமாரிடம் பாமக தலைவர் ஜி.கே.மணி நேற்றுஅளித்த கடிதத்தில் கூறியிருப்ப தாவது: 76 லட்சத்து 59 ஆயிரம்வாக்காளர்கள் மட்டுமே பங்கேற்கக்கூடிய உள்ளாட்சித் தேர்தல்களை 2 கட்டங்களாக நடத்துவது நியாயமற்றது. இதைவிட 10 மடங்கு அதிக வாக்காளர்களைக் கொண்ட சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்கள் ஒரே கட்டமாகத்தான் நடத்தப்பட்டுள்ளன.

2 கட்டங்களாக தேர்தல் நடத்தினால் பெருமளவில் முறைகேடு கள் நடைபெறவும் வாய்ப்புள்ளது. எனவே, தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும். இவ்வாறு கடிதத் தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்