கிரானைட் முறைகேடு தொடர்பாக சகாயம் குழுவின் பரிந்துரைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? - 3 வாரத்தில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

கிரானைட் முறைகேடு தொடர்பாக சகாயம் குழுவின் பரிந்துரைகள் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை கள் என்ன என்பதை 3 வாரத்தில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சகாயம் தனது 18 கட்ட விசார ணையை முடித்து கடந்த 2015 நவம்பர் 23-ல் சுமார் 600 பக்க விசாரணை அறிக்கையையும், அதற்கு ஆதாரமாக 7 ஆயிரம் பக்கங்கள் அடங்கிய இணைப்பு ஆவணங்களையும் தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகி யோர் அடங்கிய அமர்வில் விசார ணைக்கு வந்தது. அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஏ.எல்.சோமயாஜி ஆஜரானார்.

அப்போது சகாயம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.ராதா கிருஷ்ணன், கிரானைட் முறைகேட்டால் அரசுக்கு ஒரு லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே சகாயம் குழுவின் அறிக்கை களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும், என்றார்.

அதையேற்க மறுத்த நீதிபதிகள் தங்களது உத்தரவில், ‘‘சகாயம் குழுவின் பரிந்துரைகள் படி இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? என்பதையும் இனிமேல் எடுக் கப்போகும் நடவடிக்கைகள் என்ன? என்பதையும் தமிழக அரசு 3 வாரத்திற் குள் பதில் அளிக்க வேண்டும். அத்துடன் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது எடுக்கப்பட் டுள்ள கிரிமினல் நடவடிக்கை என்ன? மற்றும் துறைவாரியான நடவடிக்கை என்ன? என்பதையும் 3 வாரத்திற்குள் தெரிவிக்க வேண்டும்’’ என்று கூறி விசாரணையை வரும் மார்ச் 31-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்