ஜோலார்பேட்டையில் இருந்து பர்கூருக்கு புதிய அரசு பேருந்து இயக்கம்

By செய்திப்பிரிவு

ஜோலார்பேட்டையில் இருந்து பர்கூர் வரை செல்லும் அரசுப் பேருந்தை சட்டப்பேரவை உறுப் பினர் தேவராஜி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து நாட்றாம்பள்ளி, வெலக்கல்நத்தம் வழியாக கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பகுதிக்கு அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என பொது மக்கள் தரப்பில் நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப் புரம்) வேலூர் மண்டலம் சார்பில் ஜோலார்பேட்டை பகுதியில் இருந்து புத்துக்கோயில், நாட்றாம் பள்ளி, வெலக்கல்நத்தம் வழியாக பர்கூர் செல்லும் தடம் எண்:டி1 என்ற நகரப் பேருந்து சேவை நேற்று தொடங்கியது.

இதற்கான நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வேலூர் மண்டல பொது மேலாளர் நடராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வில்சன்ராஜசேகர், வேளாண் ஒழுங்கு விற்பனை கூடம் கூட்டுறவு சங்கத்தலைவர் எஸ்.ராஜேந்திரன் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். ஜோலார்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் தேவராஜி சிறப்பு விருந் தினராக கலந்து கொண்டு, ஜோலார்பேட்டையில் இருந்து பர்கூர் பகுதிக்கு செல்லும் அரசுப் பேருந்து சேவையை கொடியசைத்து நேற்று தொடங்கி வைத்தார்.

இந்த பேருந்து ஜோலார் பேட்டையில் இருந்து தினசரி காலை 7.40 மணிக்கு பர்கூர் பகுதிக்கு புறப்படும். அதேபோல, பர்கூரில் இருந்து தினசரி மாலை 3.50 மணிக்கு ஜோலார்பேட்டைக்கு வரும். பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் இப்பேருந்து சேவை மூலம் அதிகமாக பயன்பெறுவார்கள் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

47 mins ago

இந்தியா

52 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்