அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் திருவிழாவுக்கு பக்தர்கள் நேரில் வர அனுமதியில்லை: காவல் ஆணையர் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தில் 49-வது வருடாந்திர திருவிழா, இன்று (29-ம் தேதி) தொடங்கஉள்ளது. கரோனா பெருந்தொற்று காரணமாக திருவிழாவில் நேரில் பங்கேற்க இந்த ஆண்டுபொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் அனுமதி இல்லை. ஆகையால்பொதுமக்களும், பக்தர்களும், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்துக்கு கொடியேற்ற தினமான இன்றும், அடுத்தமாதம் 7-ம் தேதி நடைபெறும் தேரோட்டம் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் வருவதை தவிர்க்க வேண்டும். பக்தர்கள் இந்நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மற்றும் வலைதளங்களில் நேரடியாக காணலாம்.

பொதுமக்கள் இன்று மற்றும் அடுத்த மாதம் 7-ம் தேதி ஆகிய இரு தினங்களிலும் பெசன்ட் நகர் கடற்கரை பகுதிக்கு வாகனத்தில் வர வேண்டாம். அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், பெசன்ட் நகரை சுற்றியுள்ள வர்த்தக வளாகங்கள், கடைகள் செயல்பட இன்றுமுதல் அடுத்த மாதம் 8-ம் தேதி வரை அனுமதி மறுக்கப்படுகிறது.

திருவிழா நாட்களில் பொதுமக்களும், பக்தர்களும் பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிகளுக்கு வர அனுமதிமறுக்கப்படுகிறது. பொதுமக்களும், பக்தர்களும் கரோனா தொற்றிலிருந்து விடுபட ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

28 mins ago

இந்தியா

39 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

23 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

56 mins ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்