சென்னையிலிருந்து 105 நாட்களுக்குப் பிறகு திருப்பதி, பெங்களூருவுக்கு பேருந்து சேவை தொடக்கம்

By செய்திப்பிரிவு

தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வுகள் காரணமாக பல்வேறு பகுதிகளில் இருந்து ஆந்திரா, கர்நாடகாவுக்கு நேற்று காலை முதல் பேருந்துகள் இயக்கப்பட்டன.

சென்னை கோயம்பேட்டில் இருந்து பெங்களூரு, திருப்பதி, நெல்லூர், காளஹஸ்தி, தடா உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 105 நாட்களுக்குப் பிறகு 200 ருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதேபோல், ஆந்திரா அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு 150 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இது தொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஆந்திரா, கர்நாடாகாவுக்கு 1,000 அரசு பேருந்துகளை இயக்கி வருகிறோம். சென்னையில் இருந்து 200 பேருந்துகளைஇயக்குகிறோம். பயணிகளின் உடல் வெப்ப நிலையை பரிசோதித்த பிறகே அவர்களை பேருந்துகளில் அனுமதிக்கிறோம். மற்ற வழித்தடங்களை விட, பெங்களூரு, திருப்பதி, சித்தூர் வழித்தடங்களில் பயணிகள் அதிகளவில் பயணம் செய்கின்றனர். ஏசி பேருந்துகளின் சேவை இன்னும் தொடங்கவில்லை’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

இந்தியா

7 mins ago

இந்தியா

38 mins ago

தமிழகம்

18 mins ago

இந்தியா

53 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்