ஐசிஎப் பொது மேலாளராக ஏ.கே.அகர்வால் பொறுப்பேற்பு

By செய்திப்பிரிவு

சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் இணைப்பு பெட்டி தொழிற்சாலையின் (ஐசிஎப்) பொதுமேலாளராக ஏ.கே.அகர்வால் பொறுப்பேற்றுக் கொண்டார்.

சென்னை பெரம்பூரில் இயங்கிவரும் ரயில் இணைப்பு பெட்டி தொழிற்சாலை (ஐசிஎப்), ரயில்வேக்கு தேவையான பல வகையான ரயில் பெட்டிகளை தயாரித்து வழங்கி வருகிறது. கடந்த சில மாதங்களாக இந்ததொழிற்சாலைக்குப் புதியபொது மேலாளர் நியமிக்கப்படவில்லை. தெற்கு ரயில்வேயின் பொதுமேலாளர் ஜான் தாமஸ் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.

இந்நிலையில், இந்திய ரயில்வேயின் தொழிற்சாலைகள் நவீனமயமாக்கும் மத்திய நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றிவந்த ஏ.கே.அகர்வால், சென்னை ஐசிஎப்பின் பொது மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், ஜமால்பூரில் உள்ள இந்திய ரயில்வே இயந்திரவியல் மற்றும் மின்னியல் பயிற்சிப் பள்ளியில் கடந்த 1981-ம் ஆண்டுபயிற்சி பெற்றவர். 10 ஆண்டுகளுக்கு மேலாக டீசல் ரயில் இஞ்சின்கள் பராமரிப்பு மற்றும்இயக்கம் சார்ந்த பணிகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

வடக்கு ரயில்வேயின் டெல்லிகோட்டத்தில் சதாப்தி மற்றும் ராஜதானி ரயில்களின் பராமரிப்பைதிறம்பட கையாண்டு வந்தார்.முதன் முறையாக சதாப்திரயிலுக்கு அதிநவீன எல்.எச்.பிரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு வெற்றிகரமாக இயக்கப்பட்டதிலும் இவர் முக்கிய பங்குவகித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்