புதுச்சேரியில் அனுமதியளித்தும் திறக்கப்படாத திரையரங்குகள்: மதுபார்கள் இயங்கத் தொடங்கின

By செய்திப்பிரிவு

புதுச்சேரியில் அனுமதியளித்தும் திரையரங்குகள் திறக்கப்பட வில்லை. அதே நேரத்தில் மது பார்கள் நூறு நாட்களுக்கு பிறகு இயங்கத் தொடங்கின.

புதுச்சேரியில் கரோனா இரண்டாம் அலையால் கடந்த ஏப்ரல் மாதம் கடைசி வாரத்தில் திரையரங்குகள் மூடப்பட்டன. கிட்டத்தட்ட நூறு நாட்களுக்குப் பிறகு கரோனா தொற்று குறையத் தொடங்கியதால் திரையரங்குகளை திறக்கலாம் என்று அரசு தளர்வு அறிவித்தது. ஆனால் நேற்று எந்தத் திரை யரங்கும் திறக்கப்படவில்லை.

தற்போதைய தளர்வில் அனைத்து திரையரங்குகளும் 50 சதவீத பார்வையாளர்களுடன் இரவு 9 மணிவரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே புதிய படங்கள் வெளியாகாததால் திரையரங்குகளை திறக்க உரிமையாளர்கள் தயங்கி வருகின்றனர். திரையரங்குகளை திறந்தாலும் ஏற்கெனவே வெளியான படங்களையே மீண்டும் திரையிடும் நிலை உள்ளது.

திரையரங்குகள் மூடப்பட்ட காலத்தில் ஓடிடியில் பல படங்கள் வெளியாகியுள்ளது. இதுமட்டுமின்றி 50 சதவீத பார்வையாளர் களுக்கு மட்டும் அனுமதி வழங் கப்பட்டுள்ளதால் போதிய வரு மானம் கிடைக்குமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி திரையரங்கு உரிமை யாளர்கள் தரப்பில் கேட்டதற்கு, “புதுச்சேரியில் 17-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ளன. திரையரங்கு பணியாளர்களை பணிக்கு வரவழைக்க வேண்டும். திரையரங்கை தூய்மை செய்யவேண்டும். ஒவ்வொரு இருக்கைக்கும் இடையே யாரும் அமராமல்இருக்க ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என பல பணிகள் உள்ளன. அத்துடன் புதிய படங்கள் வெளியாவது வரும் வெள்ளிக்கிழமைதான் என்பதால் வரும் 6-ம்தேதி திறக்க முடிவு எடுத்துள்ளோம்” என்று குறிப்பிட்டனர்.

மதுபார்கள் இயங்கின

அதேநேரத்தில் மதுபார்கள் நேற்று முதல் இயங்கத் தொடங்கின. மதுக்கடைகள் ஏற்கெனவே இயங்கத் தொடங்கினாலும், பார்க ளுக்கு அனுமதி தரப்படாமல் இருந்தது. ஊரடங்கு தளர்வில் பார்கள் நேற்று முதல் திறக்கலாம். அதன்படி பார்களில் 50 சதவீதம் பேர் அமரலாம். காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பார்கள் செயல்படத் தொடங்கின.

தமிழகத்தில் கரோனா பரவல்அதிகரிப்பால் பல நடவடிக்கை களை தமிழக அரசு தீவிரப்படுத் தியுள்ள சூழலில் புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகள் காரணமாக வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் வருகை கூடுதலாக இருந்தது. கடற்கரை சாலை, படகு குழாம், ஒயிட் டவுன் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் காணப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்