மதுரையில் வாடகை வீட்டுக்காரருக்கு மின் கட்டணம் ரூ.11,352: ரூ.850 செலுத்தியவருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த மின்வாரியம்

By செய்திப்பிரிவு

மதுரையில் வாடகை வீட்டுக்காரர் ஒருவர் அதிகபட்சம் ரூ.850 செலுத்தியவருக்கு ஜூலை மாதத்துக்கான மின் கட்டணமாக ரூ.11,352 செலுத்த வேண்டும் என அறிவிப்பு வந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.

மதுரை தெப்பக்குளம் தமிழன் தெருவைச் சேர்ந்தவர் ரியாஸ் (41). கல்வி ஆலோசகர். ஒன்றரை ஆண்டாக வாடகை வீட்டில் மனைவி, 2 மகன்களுடன் வசிக்கிறார். இவர் மின் கட்டணமாக ரூ. 400 முதல் ரூ. 850-க்குள் செலுத்தி வந்தார். இந்நிலையில் தற்போது மின் கட்டணமாக ரூ. 11,352 மற்றும் டெபாசிட் ரூ. 390 செலுத்தும்படி நோட்டீஸ் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரியாஸ் கூறிய தாவது:

கடந்த மார்ச் மாதத்தில் ரூ. 680 கட்டணம் செலுத்தினேன். மே மாதத்தில் ரூ. 260 செலுத்தினேன். தற்போது ஜூலை மாதத்துக்கு ரூ. 11,352 கட்டணத்தோடு, டெபாசிட் தொகையாக ரூ.390 செலுத்தும்படி அறிவிப்பு வந்துள்ளது.

தெப்பக்குளம் துணை மின் நிலைய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால் சரியான பதில் தர மறுக்கின்றனர். மீட்டரில் உள்ள வாறு பணத்தை கட்ட கெடுபிடி செய்கின்றனர். இதுவரை அதிகபட்சம் ரூ. 850-க்கும் மேல் கட்டியதில்லை. திடீரென ரூ.11,352 கட்டணம் என்பதால் கடும் அதிர்ச்சி யாக இருக்கிறது.

இதுகுறித்து மின்வாரிய உயரதிகாரிகளுக்கு ஆன்லைனில் புகார் தெரிவித்து 4 நாட்களாகி யும் நடவடிக்கை இல்லை.

இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர், தமிழக முதல்வர் ஆகியோருக்கும் புகார் அனுப்பி உள்ளேன். மின் மீட்டரில் தவறா, கணக்கீட்டில் தவறா எனத் தெரியவில்லை. இதற்கு ஒரு தீர்வு வேண்டும், என்றார்.

இதுகுறித்து தெப்பக்குளம் மின்நிலைய உதவிப் பொறியாளர் வடிவேல்குமார் கூறுகையில், கரோனா காலத்தில் மின் கணக்கீட்டில் சில தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன. எங்கே தவறு நடந்தது எனக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும். மின் மீட்டரில் குறைபாடு இருந்தாலும் சரி செய்து தரப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

5 hours ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

வேலை வாய்ப்பு

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்