மதுரை காவலரின் விழிப்புணர்வு பணி: பாராட்டு தெரிவித்த டிஜிபி

By என்.சன்னாசி

காவல்துறை தொடர்பான செய்திகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக, மதுரையைச் சேர்ந்த காவலர் ஒருவர் தமிழக டிஜிபியிடம் பாராட்டு பெற்றார்.

மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்தவர் முபாரக் அலி (31). பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு ஐடிஐ படித்துள்ளார். 2013-ல் காவல்துறையில் பணியில் சேர்ந்தார்.

நாளிதழ்களை படிப்பதில் ஆர்வம் கொண்ட இவர், போலீஸ் தொடர்பான செய்திகளை சமூக ஊடகம், வாட்ஸ்ஆப் குரூப்களில் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்நிலையில் காவல் துறையின் சமூக ஊடகப்பிரிவு (சோசியல் மீடியா) எஸ்பியாக இருந்த வருண்குமாரின் கவனத்துக்கு முபராக் அலியின் ஊடகப் பணி தொடர்பான தகவல் சென்றதால், அவரது திறமையை பாராட்டி, சமூக ஊடகப்பிரிவில் அவர் பணிபுரிய வாய்ப்பளித்தார். இதற்கிடையில், முபாரக் அலியின் பணி குறித்து ஒருங்கிணைந்த குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவின் காவல் கண்காணிப் பாளர் சரவண னுக்கும் தெரிய வந்தது.

அவர் சில நாட்களுக்கு முன்பு முபாரக்அலியிடம் பேசியுள்ளார். இந் நிலையில், நாளிதழில் வந்த காவல்துறை தொடர்பான செய்தி குறித்த தகவல் ஒன்றை அவரிடம் கேட்டபோது, அந்தத் தகவலை அடுத்தநாள் எஸ்பி சர வணனுக்கு அனுப்பினார்.

தாமதத்துக்கு காரணம் கேட்டபோது தனது மொபைல் பழுதாகிவிட்டதாக தெரிவித்து இருக்கிறார். இதனையடுத்து, அவருக்கு ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள ‘டேப்லெட்’ ஒன்றை எஸ்பி வாங்கிக் கொடுத்து ஊக்கப்படுத்தி உள்ளார்.

இந்நிலையில், முபாரக் அலியின் விழிப்புணர்வு பணியை அறிந்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவருக்கு பாராட்டுச் சான்றிதழை அனுப்பி உள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

தமிழகம்

24 mins ago

இந்தியா

31 mins ago

இந்தியா

43 mins ago

இந்தியா

53 mins ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்