மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றுசுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்திஉள்ளார்.

உலக கல்லீரல் அழற்சி தினத்தையொட்டி, சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஹெபடைட்டிஸ் பற்றிய விளக்கக் கையேட்டை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயஅறநிலையத் துறை அமைச்சர்பி.கே.சேகர்பாபு ஆகியோர் வெளியிட்டனர். தொடர்ந்து மருத்துவ களப்பணியாளர்களுக்கான ஹெபடைட்டிஸ் தடுப்பூசிபோடும்முகாமை தொடங்கிவைத்தனர்.

சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநர் தாரேஸ் அகமது, பொது சுகாதாரம் மற்றும்நோய் தடுப்புத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை இயக்குநர் விஜயா, சென்னை அரசு பொது மருத்துவமனை டீன் தேரணிராஜன், எழும்பூர் தொகுதி எம்எல்ஏ இ.பரந்தாமன் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் மா.சுப்பிரமணியன் கூறும்போது, “தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு,கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா அதிகரித்துள்ளது. இம்மாவட்டங்களின் ஆட்சியர்களிடம் பேசி வருகிறோம்.

பொதுமக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் ஓபிசி இட ஒதுக்கீடு மிக பெரிய அளவில் பயனளிக்கும். ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான கால நீட்டிப்பு குறித்து முதல்வர் முடிவெடுப்பார்” என்றார்.

செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறும்போது, “கரோனா தொற்று மிகப்பெரிய சவாலாக உள்ளது. அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என்று தொடர்ந்து செயலாற்றி வருகிறோம். மக்களை தேடி மருத்துவ திட்டத்தை, வரும்5-ம் தேதி கிருஷ்ணகிரி சாமனப்பள்ளி கிராமத்தில் முதல்வர் தொடங்கி வைக்கிறார்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

27 mins ago

இந்தியா

25 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

உலகம்

3 hours ago

வணிகம்

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்