இலங்கையிலிருந்து குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு

By கி.மகாராஜன்

இலங்கையிலிருந்து தமிழகத்தில் குடியேறியவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க பரிசீலிக்க வேண்டும் என, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மத்திய அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.

திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் ஜெகதீஸ்வரன், யோகேஸ்வரன் உள்ளிட்ட 65 பேர், தங்களை இலங்கை அகதியாக கருதாமல், தாயகம் திரும்பியவர்களாக கருதி இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி, உயர் நீதிமன்ற கிளையில் கடந்த 2009-ல் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரர்கள் இந்திய குடியுரிமை கேட்டு புதிதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். ஆட்சியர்கள் தாமதப்படுத்தாமல் விண்ணப்பங்களை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். மத்திய அரசு 16 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, 2019 ஜூன் 17-ல் உத்தரவிட்டார். இந்நிலையில், தனி நீதிபதி 2019-ல் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீடு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் டி.எஸ்.சிவஞானம் அமர்வில் இன்று (ஜூலை 30) விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில், "இலங்கையில் இருந்து தமிழகம் வந்தவர்களை சட்டவிரோதமாக குடியேறியவர்களாகவே கருத முடியும். அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க முடியாது" எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தலைமை நீதிபதி, "இலங்கையிலிருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மத்திய அரசு மனுவை பரிசீலித்து குடியுரிமை வழங்கலாம் அல்லது மறுக்கலாம். அதை செய்யாமல் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தது ஏன்?" என கேள்வி எழுப்பினார்.

பின்னர், மனு தொடர்பாக தமிழக அரசு மற்றும் இந்திய குடியுரிமை கேட்டு வழக்கு தொடர்ந்தவர்கள் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 23-க்கு ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 mins ago

சினிமா

15 mins ago

சினிமா

18 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

16 mins ago

சினிமா

34 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

28 mins ago

சினிமா

39 mins ago

சினிமா

42 mins ago

வலைஞர் பக்கம்

46 mins ago

சினிமா

51 mins ago

மேலும்