சாலையில் கொட்டி கிடந்த காலாவதியான மருந்துபாட்டில்கள்

By இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே காலாவதியான மருந்துபாட்டில்கள் சாலையில் கொட்டி கிடந்தன.

மருத்துவக் கழிவுகள் மேலாண்மை விதிகள்படி கையுறைகள், பயன்படுத்திய ஊசிகள், காலாவதியான மருந்து, மாத்திரைகள், அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்திய பொருட்கள், குளுக்கோஸ், மருந்து பாட்டில்கள் போன்ற மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்ற வேண்டும்.

மேலும் மருத்துவக் கழிவுகளை அழிப்பதற்கு தமிழகம் முழுவதும் 11 பொது மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. முறையாக மருத்துவக் கழிவுகள் அகற்றப்படுகிறதா? என்பதை சுகாதாரத் துறை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளின் மருத்துவக் கழிவுகள் தஞ்சை சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்படுகின்றன.

ஆனால் காலாவதியான மருந்துகளை முறையாக சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பாமல் ஆங்காங்கே சாலையோரங்களில் கொட்டி வருகின்றனர். இந்நிலையில் நேற்று சிங்கம்புணரி அடுத்த ஆபத்தாரணபட்டி அருகே சாலையில் காலாவதியான மருந்து பாட்டில்கள் கொட்டி கிடந்தன. அவ்வழியாக வந்த சிங்கம்புணரி ஒன்றியத் தலைவர் திவ்யா பிரபு மருந்து பாட்டில்களை அகற்ற நடவடிக்கை எடுத்தார்.

இதேபோல் சில வாரங்களுக்கு முன்பு வேட்டையன்பட்டி அருகே பெரியாறு பாசன கால்வாய்யோரத்தில், அரசினம்பட்டி செல்லும் சாலையோரத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டிருந்தன. உரிய விசாரணை நடத்தி சாலையோரங்களில் மருத்துவ கழிவுகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

11 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்