2,000 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஸ்டெர்லைட் விநியோகம்: 32 மாவட்டங்களுக்கு அனுப்பிவைப்பு

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் இருந்து மருத்துவ பயன்பாட்டுக் கான ஆக்சிஜன் விநியோகம் 2,000 மெட்ரிக் டன் என்ற அளவை நேற்று கடந்தது. இதுவரை 2,006 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் 32 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கரோனா தொற்றின் 2-வது அலையின் தாக்கம் உச்சத் தில் இருந்தபோது மருத்துவ ஆக்சிஜன் தேவை பல மடங்கு அதிகரித்தது. உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. அங்கு, மே 13-ம் தேதி மருத்துவ பயன்பாட்டுக்கான திரவ ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது.

முதலில் தென் மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. தற்போது, தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களுக்கு தொடர்ந்து அனுப்பி வைக்கப்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் விநியோகம் 2,000 மெட்ரிக் டன் என்ற அளவை நேற்று கடந்தது.

இதுதொடர்பாக, ஸ்டெர்லைட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பு:

2,000 மெட்ரிக் டன் மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் விநியோகம் என்ற மைல் கல்லை வெற்றிகரமாக கடந்துள்ளோம். நேற்று மட்டும் பல்வேறு மாவட்டங்களுக்கு 12.20 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டது. இதுவரை 2006.36 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, 11.19 மெட்ரிக் டன் வாயு நிலையிலான ஆக்சிஜன் சிலிண்டர்களில் அடைத்து விநி யோகம் செய்யப்பட்டுள்ளது.

துல்லியமாக கண்காணிப்பு

எங்களது ஆக்சிஜன் விநியோக தகவல்கள் அனைத்தும், மத்திய அரசின் டிஜிட்டல் ஆக்சிஜன் கண்காணிப்பு அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆக்சிஜன் விநியோகம் துல்லியமாக கண்காணிக்கப்பட்டு, தேவையான பகுதிகளுக்கு உடனுக்குடன் அனுப்பப்படுகிறது. தொடர்ந்து ஆக்சிஜன் விநி யோகத்தை சிறப்பாக செய்ய அனைத்து உதவிகளையும் செய்து வரும் தமிழக அரசுக் கும், தூத்துக்குடி மாவட்ட நிர் வாகத்துக்கும், அனைத்து அலு வலர்கள், பணியாளர்கள், தொழி லாளர்களுக்கும் நன்றியை தெரி வித்துக் கொள்கிறோம்.

ஆக்சிஜன் விநியோகத்தை தவிர தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனை களுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை ஸ்டெர்லைட் நிறுவனம் வழங்கி யுள்ளது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

இந்தியா

24 mins ago

இந்தியா

55 mins ago

தமிழகம்

35 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்