திரவ மருத்துவக் கழிவுகளை அழிக்கும் விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அவகாசம் - பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் திரவ மருத் துவக் கழிவுகளை சுத்திகரிக்கும் நிலையங்களை அமைக்கக் கோரி திருவான்மியூரைச் சேர்ந்த ஜவஹர்லால் சண்முகம் என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய 2-ம் அமர்வில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த அமர்வு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

தீர்ப்பாயம் உத்தரவு

அதன்படி மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த அறிக்கையில், 123 மருத்துவமனைகள் உரிய அனுமதி பெறவில்லை என குறிப்பிட்டிருந்தது.

அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 4 மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் உரு வாகும் மருத்துவக் கழிவுகள் அழிக்கப் படும் முறை, சம்பந்தப்பட்ட தனியார் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கடந்த ஓராண்டில் கொண்டுசெல்லப்பட்ட கழிவுகளின் அளவு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அமர்வின் உறுப்பினர் கள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இம்மனு அமர் வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி பி.ஜோதிமணி, தொழில்நுட்பத்துறை உறுப்பினர் பேராசிரியர் ஆர்.நாகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசார ணைக்கு வந்தது.

அப்போது மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 10-ம் தேதி வரை அவகாசம் வழங்கி, மனு மீதான விசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்