சட்டப்பேரவை தேர்தலுக்கு பயன்படுத்த உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி பிப்.8-ல் தொடங்கும்: தமிழக தலைமை தேர்தல் அலுவலர் தகவல்

By செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்க்கும் பணி வரும் 8-ம் தேதி முதல் தொடங்கும் என தமிழக தலைமை தேர்தல் அலுவலர் ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக திருச்சியில் நேற்று நடைபெற்ற மண்டல அளவிலான பயிற்சி முகாமில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தேர்தல் பணிகளை மேற்கொள் ளும் முறை, வாக்குப்பதிவு இயந் திரங்களை சரிபார்த்தல், தேர்தல் பணியில் ஈடுபடுவோர் குறித்த விவரம், வாக்குச்சாவடிகளில் மாற் றுத் திறனாளிகளுக்கு அளிக்கப்பட வேண்டிய வசதிகள் குறித்து ஆட்சி யர்கள், எஸ்.பி.க்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இத்தேர் தலின்போது, தகவல் தொழில்நுட் பம் மூலம் எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல புதிய செயல்பாடுகளை மேற் கொள்ள உள்ளோம். அதுதொடர் பாகவும் பயிற்சி அளிக்கப்பட்டுள் ளது.

தமிழக தேர்தலுக்காக வெளி மாநிலங்களிலிருந்து 75 ஆயிரம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளன. இதன் படி பிஹாரிலிருந்து 50 ஆயிரம், குஜராத்திலிருந்து 15 ஆயிரம், மகா ராஷ்டிராவிலிருந்து 10 ஆயிரம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தமி ழகத்துக்கு அனுப்பப்படுகின்றன. அவை இன்னும் 2, 3 நாட்களுக்குள் வந்துவிடும். அதன்பின் வரும் 8-ம் தேதி முதல் வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்க்கும் பணி தொடங்கும்.

புதிய கட்டுப்பாடு

வந்த பிறகே பதற்றமான வாக்குச் சாவடிகள் முடிவு செய்யப்படும். தேர்தலையொட்டி இலவச திட் டங்கள் அறிவிப்பதை முன்கூட் டியே தடை செய்வது குறித்து இப்போது கூற முடியாது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகே, புதிய கட்டுப்பாடுகள் குறித்து தெரிவிக்கப்படும் என்று ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

21 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

58 mins ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

மேலும்