ரூ.1 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்: வேளச்சேரியில் 4 பேர் கைது; போலீஸார் தொடர் விசாரணை

By செய்திப்பிரிவு

வேளச்சேரியில் போதையில் இருந்த நபரைச் சந்தேகத்தின் பேரில் போலீஸார் பிடித்து விசாரணை நடத்தியதில் மிகப்பெரிய போதை மாத்திரை விற்கும் கும்பல் சிக்கியது. ரூ.1 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகளைக் கைப்பற்றிய போலீஸார் 4 பேரைக் கைது செய்தனர்.

சென்னையில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக வந்த தகவலைத் தொடர்ந்து, இதைக் கட்டுப்படுத்த காவல் ஆணையர் உத்தரவின்பேரில் பல தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அடையாறு துணை ஆணையர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தனிப்படை போலீஸாரில் ஒரு பிரிவினர் வேளச்சேரி பேபி நகரில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போதையில் தள்ளாடியபடி வந்த ஒரு நபரைப் பிடித்து விசாரித்தனர்.

அவரைச் சோதித்தபோது ஒரு கிராமுக்கும் குறைவான, மாத்திரை வடிவிலான போதைப் பொருளை ஒரு கவரில் போட்டு வைத்திருந்தது தெரியவந்தது. அதுகுறித்து விசாரித்தபோது அது மெத்தா பேட்டமைன் (Methaphetamine) என்கிறபோதைப்பொருள் எனத் தெரியவந்தது. விசாரணையில் திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த அஜ்மல்கான் (22) என்பவரிடம் அதை வாங்கியதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து அவருக்கு போதை மருந்தை விற்ற அஜ்மல்கானை போலீஸார் பிடித்தனர். பின்னர் அஜ்மல்கானிடம் விசாரணை நடத்தியபோது ராயபுரத்தைச் சேர்ந்த பஷீர் அகமது (48) என்பவர் வெளிநாட்டிலிருந்து மெத்த பேட்டமைன் போதைப்பொருளை வரவழைத்து சப்ளை செய்வதாகத் தெரிவித்தார். பின்னர் அவரை போலீஸார் தேடி,கைது செய்தனர். அவர் கொடுத்ததகவலின்பேரில் அவரது கூட்டாளிகளான சேப்பாக்கத்தைச் சேர்ந்தசேட்டு முகமது(47), பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த அப்துல் காலிக்(47)ஆகியோரையும் கைது செய்தனர்.பிடிபட்டவர்களிடமிருந்து சுமார்ரூ.1 கோடி மதிப்பிலான, மாத்திரைவடிவிலான 1 கிலோ 348 கிராம்மெதா பேட்டமைன் போதைப்பொருளைக் கைப்பற்றினர்.

மேலும் அவர்களிடமிருந்து ரூ.1.22 லட்சம், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 கார்கள், 2 இருசக்கர வாகனங்கள், 7 செல்போன்களையும் கைப்பற்றினர். இதில் முக்கியக் குற்றவாளியான பஷீர்அகமது என்பவர் ஏற்கெனவே 2010-ல் சட்டவிரோதமாக எலெக்ட்ரானிக் பொருட்களைக் கடத்தி வந்த குற்றத்துக்காக சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறையினரால் கைது செய்யப்பட்டவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட நால்வருடன் வேறு யாரும் சென்னையில் தொடர்பில் உள்ளனரா? இதேபோன்று வேறு போதைப்பொருள்கும்பல் சென்னையில் செயல்படுகிறதா? வெளிநாட்டிலிருந்து எப்படிசென்னைக்கு போதைப் பொருட்கள் வருகின்றன என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கார்ட்டூன்

1 hour ago

இந்தியா

33 mins ago

வர்த்தக உலகம்

37 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

உலகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்