ஜூலை 19 வரை ஊரடங்கு நீட்டிப்பு: எவை எவைக்குத் தடை?- முழு விவரம்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் ஜூலை 19 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்துவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் எவை எவைக்குத் தடை என்ற விவரம் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்பு:

''மாநிலத்தின் கரோனா நோய்த் தொற்று நிலையைக் கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தைக் கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு 12-7-2021 முதல் 19-7-2021 காலை 6.00 மணி வரை தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது.

· மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசுப் பேருந்து போக்குவரத்து (புதுச்சேரி நீங்கலாக)

· மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமானப் போக்குவரத்து

· திரையரங்குகள் செயல்படத் தடை

· அனைத்து மதுக்கூடங்கள் திறக்கத் தடை

· நீச்சல் குளங்கள் செயல்படத் தடை

· பொதுமக்கள் கலந்துகொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள் நடத்தத் தடை

· பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள் நடத்தத் தடை

· பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்கத் தடை

· உயிரியல் பூங்காக்கள் திறக்கத் தடை

· நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

· இறுதிச் சடங்குகளில், 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்''.

இவ்வாறு ஊரடங்கில் மேற்கண்ட தடைகள் தொடரும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

59 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்