லியோனி நியமனத்தை திரும்பப் பெற வேண்டும்: தமிழக அரசுக்கு இந்து முன்னணி கோரிக்கை

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு பாட நூல் கழக தலைவராக ஐ.லியோனி நியமனம் செய்யப்பட்டதை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்து முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டின் பாடநூல் நிறுவனத் தலைவராக ஐ.லியோனி நியமிக்கப்பட்டுள்ளார். பட்டிமன்றத்தில் பேசுகிற தகுதி மட்டுமேகொண்ட ஒருவரை, பாடநூல்கழகத் தலைவராக நியமித்துஇருப்பது வருந்தத்தக்கது. பேரவைத் தேர்தலில் திமுகவுக்காக பிரச்சாரம் செய்ததால் அவருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது தெரிகிறது.

பட்டிமன்ற மேடைகளிலும், திமுக பிரச்சார மேடைகளிலும் ஆபாசமாக, அருவருக்கத்தக்க வார்த்தைகளால் பெண்களை விமர்சித்துள்ளார். இதுபோன்ற நபர்களை கல்வி தொடர்பான துறைக்கு நியமனம் செய்திருப்பது வேதனையானது.

கட்சிக்கும், கட்சித் தலைமைக்கும் மிகவும் வேண்டியவர் என்பதால் ஒருவரை அரசுப் பணியில் நியமிப்பது கண்டிக்கத்தக்கது. அவரது நியமனத்தை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

இந்தியா

18 mins ago

கருத்துப் பேழை

11 mins ago

கருத்துப் பேழை

19 mins ago

சினிமா

2 hours ago

கல்வி

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்