புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 இடங்களில் ‘ஆசிரியம்’ கல்வெட்டுகள் கண்டெடுப்பு

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டாரத்திலுள்ள மலையடிப்பட்டி, மேலப்பனையூர், தேவர்மலை ஆகிய இடங்களில் தொல்லியல் ஆய்வுக் கழகத் தலைவர் கரு.ராஜேந்திரன், நிறு வனர் ஆ.மணிகண்டன் தலைமை யிலான குழுவினர் பாதுகாப்பு பணி ஒப்பந்தத்தை வெளிப்படுத்தும் ஆசிரியம் கல்வெட்டுகளை கண்டு பிடித்துள்ளனர்.

இதுகுறித்து ஆ.மணிகண்டன் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் 13-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிலையான ஒருங் கிணைந்த ஆட்சி முறை மறையத் தொடங்கிய சூழலில் அதிக நிலம் படைத்தவர்கள் குறுநில மன்னர் களாக செயல்பட்டு வந்துள்ளனர். இவர்கள், தமது நிர்வாகத் துக்குட்பட்ட மக்களுக்கும், அவர் களின் உடைமைகளுக்கும், வெளியூரிலிருந்து வணிகம் செய் யும் வணிகர் மற்றும் வணிகப் பொருட்களுக்கும் உரிய பாதுகாப் பாளர்களை நியமித்தனர்.

இத்தகைய, பாதுகாவல் பணியை அறிவிக்கும் ‘ஆசிரியம்’ கல்வெட்டுகள், திருமயம் வட்டம் தேவர்மலை, மேலப்பனையூர், மலையடிப்பட்டி ஆகிய இடங் களில் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இக்கல்வெட்டுகள் ஊரையோ, கோயிலையோ நிர்வகிப்போரை அறிவிக்கும் ஆசிரியம் கல்வெட்டு கள் என்பதை அறிய முடிகிறது.

மேலும், இதுவரை தமிழகத் தில் கண்டுபிடிக்கப்பட்ட 67 கல் வெட்டுகளை எமது ஆய்வில் பட்டியலிட்டதில் 53-ல் ஆசிரியம், 8-ல் ஆயம், 3-ல் ஆசுரியம், 3-ல் ஆஸ்ரயம் மற்றும் ஆச்ரயம் ஆகிய சொல்லாடல்கள் கையா ளப்பட்டுள்ளன.

எனவே, ஆசிரியம் என்ற தமிழ்ச்சொல் சங்கப்பாடல்களிலும் காணப்படுவதால், இதை சம்ஸ் கிருத சொல்லாடலாக மட்டுமே கருதுவது அனைத்து கல்வெட் டுகளுக்கும் பொருந்தாது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்