பாலியல் வன்கொடுமையில் கல்லூரி மாணவி இறந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி போராட்டம்: அமைச்சர் மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை கோரி மனு

By செய்திப்பிரிவு

கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐ டிக்கு மாற்றக் கோரி எஸ்எஸ்பிஅலுவலகம் முன்பு போராட்டம் நடந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின்குடும்பத் தாரை மிரட்டும்அமைச்சர் மீதுபோக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளிக் கப்பட்டது.

மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி பாலியல் வன் கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற உத்தரவிடக் கோரி புதுச்சேரி மனித உரிமை கள் மற்றும் நுகர்வோர் பாது காப்பு இயக்கம் உள்ளிட்ட பல் வேறு அமைப்புகள் சார்பில் எஸ்எஸ்பிஅலுவலகத்தை முற்றுகையிடு வதாக அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று நடைபெற்ற போராட் டத்திற்கு மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்க பொதுச் செய லாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். இதில் திராவிடர் கழகம் சிவ வீரமணி, தமிழர் களம் அழகர், புரட்சியாளர் அம்பேத்கர் மறுமலர்ச்சி இயக்கம் பாவாடைராயன் உட்பட பலர் பங்கேற்றனர்.

வெங்கடசுப்பா சிலை அருகே ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு எஸ்எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக சென் றனர். போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து முக்கிய நிர்வாகிகள் மட்டும் எஸ்எஸ்பி பிரதிக்சாவை சந்தித்து மனு அளித்தனர். அப்போது போராட்டக்காரர்களும், பாலியல் வன்கொடுமையால் இறந்த பெண்ணின் தாயாரும் தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர். கோரிக்கைகளை கேட்டுக் கொண்ட பின்பு அதன் மீது நடவடிக்கை எடுப்பதாக எஸ்எஸ்பி உறுதியளித்தார்.

இதுதொடர்பாக போராட்டக் காரர்கள் தரப்பில் கூறுகையில், “எஸ்எஸ்பியிடம் அளித்த மனுவில் பல கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளோம். குறிப்பாக, கல்லூரி மாணவி பாலியல் வழக்கைபதியாமல் அலட்சியம் காட்டிய மேட்டுப்பாளையம் காவல் நிலைய பொறுப்பாளர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் வன்கொடுமையால் பெண்ணை இழந்த குடும்பத்தாரை மிரட்டும் அமைச்சர் சாய் சரவணன்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். புதுச்சேரியில் அதிகரித்து வரும் குழந்தைகள் மீதான பாலியல்வன்கொடுமைகளை கண் காணித்து, குழந்தைகளை பாது காக்க மாநில குழந்தைகள் ஆணையத்தை அமைக்க வேண்டும்” என்று குறிப்பிட் டுள்ளோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

15 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

உலகம்

4 hours ago

ஆன்மிகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்