கோவையில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் அலைமோதும் கூட்டம்: தொற்று பரவலை தடுக்க பள்ளிகளுக்கு முகாம்கள் மாற்றப்படுமா?

By செய்திப்பிரிவு

கூட்ட நெரிசலை தவிர்க்க ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படும் தடுப்பூசி மையங்களை பள்ளி மைதானங்க ளுக்கு மாற்ற வேண்டும் என பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் அரசு ஆரம்பசுகாதார நிலையங்கள், மாநகரில் அரசு மருத்துவமனை மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தன. பொதுமக்கள் அதிகளவில் கூடியதால், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், தொற்று பாதிப்பை தவிர்க்கவும் மாநகராட்சி பள்ளிகளுக்கு தடுப்பூசி மையங்கள் இடம் மாற்றப்பட்டன.

ஆனால், ஊரக பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து தடுப்பூசி மையங்கள் மாற்றப் படவில்லை.

கோவையில் சோமனூர், அரிசிபாளையம், பூலுவப்பட்டி, கஞ்சம்பட்டி, நெகமம், நல்லட்டிபாளையம், தாளியூர், காரமடை, பொகலூர் உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் தற்காலிக கரோனா சிகிச்சை மையங்களாக செயல்பட்டு வருகின்றன. இங்குகரோனா நோயாளிகள் அனுமதிக்கப் பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இங்கேயே பொதுமக்களுக்கான தடுப்பூசியும் செலுத்தப் பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான டோக்கன் பெறுவ தற்கு அதிகாலை முதலே மக்கள் கூடிவிடுகின்றனர். ஒருவரோடு ஒருவர்மோதியபடி டோக்கன் பெற முயல்கின்றனர். டோக்கன் பெற்ற பிறகு மணிக் கணக்கில் ஊசி செலுத்துவதற்காக வரிசையில் இடைவெளி இல்லாமல் காத்திருக்கின்றனர். கரோனா நோயாளிகளும் அங்கு வருவதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

இதுதொடர்பாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட பொதுமக்கள் கூறும்போது, “மாநகராட்சியைப் போல, ஊரக பகுதிகளில் உள்ள பள்ளி மைதானங்களுக்கு தடுப்பூசி செலுத்தும் மையங்களை மாற்ற வேண்டும். அங்கு இடைவெளியுடன் மக்கள் நிற்கவோ, அமரவோ ஏற்பாடு செய்து டோக்கன் வரிசைப்படி அழைக்கலாம். மேலும், தடுப்பூசி கையிருப்பு, எத்தனை மணிக்கு டோக்கன் வழங்கப்படும், எப்போது வரை தடுப்பூசி செலுத்தப்படும் என்ற அறிவிப்பு பலகையையும் தினந்தோறும் வைக்கவேண்டும். இதனால், யாரையும் அணுகிமக்கள் தகவல் கேட்க வேண்டியிருக் காது. தேவையில்லாமல் மக்கள் கூடுவதும் தவிர்க்கப்படும்” என்றனர்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் கூறும்போது, “மாநக ரைப்போல ஊரக பகுதிகளிலும் தடுப்பூசி முகாமை பள்ளிகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுப்பது குறித்துசுகாதாரத் துறையினருக்கு அறிவுறுத் தப்படும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

31 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

மேலும்