போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள தன்னம்பிக்கை தந்த கணினி பயிற்சி: வெற்றிப் படிக்கட்டுகளில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள்

By ஜி.ஞானவேல் முருகன்

அரசுப் போட்டித் தேர்வுகளுக்குத் தங்களை தயார்படுத்திக் கொள்வதற்கான தன்னம்பிக்கை மற்றும் திறனை கணினி பயிற்சியால் பெற்றுவருகின்றனர் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள்.

எப்போதும் இணையத்துடன் இணைந்திருக்கும் இந்த உலகில் கணினி இல்லையென்றால் எதுவும் சாத்தியம் இல்லை. சிபியு, மானிட்டர் போன்றவற்றின் பெயர்களை வார்த்தைகளாக மட்டும் காதால் கேட்டுப் பழகிய பார்வையற்றோர், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் கணினியை எளிதாக கையாள்வது சாத்தியம் என்பது உறுதியாகியுள்ளது.

பிரெய்லி எழுத்துகளை கையால் உணர்ந்து படித்து வந்த பார்வை யற்றோர் இப்போது கணினியின் திரைகளில் தெரியும் எழுத்துகளை திரை வாசிப்பான் மென்பொருள் உதவியுடன் சொற்களாகக் கேட்டு உள்வாங்கிக் கொள்கின்றனர். இந்த வசதியால், படித்த பார்வையற்ற பலர் இன்றைக்கு இணையத்தைப் பயன்படுத்துவதும், சாட் செய்வதும், மெயில் அனுப்புவதும், புத்தகங்கள் வாசிப்பதும் சாதாரணமாகிவிட்டது.

இதை பலர் ஆக்கப்பூர்வமாக போட்டித் தேர்வுக்கு தேவையான பாடங்களை படிப்பதற்காகப் பயன் படுத்துகின்றனர். பெருநகரங்களில் பார்வையற்றோருக்கான இத் தகைய கணினி பயிற்சி எளிதாகக் கிடைத்து வந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள சிறுகுறு நகரங்கள் மற்றும் கிராமப் பகுதிகளில் வசிக்கும் படித்த பார்வையற்றோர் பயன்பெறும் நோக்கில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மாற்றுத்திறனாளிகள் மையம் சார்பில், 3 ஆண்டுகளுக்கு முன்பே 5 நாள் மற்றும் 3 நாள் கணினி பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

இந்த பயிற்சி வகுப்பால் பயன்பெற்ற பலர் இன்று பள்ளிகளில் ஆசிரியர்களாகவும், தனியார் நிறுவனங்களிலும் பணியில் உள்ளனர்.

தற்போது மத்திய அரசு ஆணைப்படி வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், பார்வையற்றோருக்கு ஒரு சதவீதம் ஒதுக்கியுள்ளனர். இதையடுத்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்தினர் ஒரு மாதகால கணினி பயிற்சி வகுப்புகளை சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய 4 இடங்களில் நடத்தி முடித்ததுடன் தொடர்ந்து அடுத்த கட்டப் பயிற்சிக்கும் தயார்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பயிற்சி மையத்தின் துறைத் தலைவர் முனைவர் பிரபாவதி கூறியதாவது: பார்வையற்றோர் கணினியைப் பயன்படுத்துவதில் தன்னிறைவு பெறுவதன் மூலம் கற்றல் மற்றும் வேலைவாய்ப்பு பெற முடியும். இப்பயிற்சி மூலம் இவர்களுக்கு மொழிவளம், பகுத்தறியும் திறன், சொல்லியல் திறன் மற்றும் முக்கியமாக போட்டித் தேர்வுக்கான அனைத்து திறன்களும் கிடைக்கும்.

பயிற்சிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் பார்வையற்றோரின் வசதிக்காக (என்விடிஏ) திரை வாசிப்பான் மென்பொருள், பயிற்சிக் கையேடு அடங்கிய ஒலிப் புத்தகம் வழங்குவதால் அவர்கள் தங்களுடைய கணினி, மடிக்கணினியில் இவற்றை இயக்கிக் கொள்ளலாம். இனி வரும் காலங்களில் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைக்குச் செல்லும் பார்வையற்றோருக்கு கணினி பயிற்சி மிக அவசியம். தங்குமிடம் உணவு உட்பட இலவசமாக கிடைக்கும். இதுபோன்ற பயிற்சியை பின்தங்கிய பகுதிகளில் உள்ள பார்வையற்றோரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

“படிக்கும்போது சக மாணவிகள் கணினியைப் பற்றிக் கூறும்போது அதன் பயன்பாடு குறித்து வியந்துள்ளேன். ஆனால், இந்த பயிற்சி மூலம் அவர் கூறியதை என்னால் உணர முடிந்தது. திரை வாசிப்பான் மென்பொருள் உதவியுடன் தற்போது அரசுப் போட்டித் தேர்வுகளுக்குத் தேவையான புத்தகங்களை நான் படிக்கிறேன். ஏனென்றால் எங்கள் உலகமும் போட்டி நிறைந்ததாகி விட்டது. போட்டியை எதிர்கொள்வதற்கான தன்னம்பிக்கையை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கணினி பயிற்சி எனக்குத் தந்துள்ளது” என்கிறார் பார்வையற்ற மாற்றுத் திறனாளியான முத்துலட்சுமி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

19 mins ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

53 mins ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்