மீண்டும் வெள்ளம் சூழ்ந்ததால் அம்பத்தூர் பால்பண்ணையில் உற்பத்தி கடும் பாதிப்பு

By செய்திப்பிரிவு

அம்பத்தூர் பால் பண்ணையை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பால் உற்பத்தி மீண்டும் பாதிப்படைந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் அடுத்த கொரட்டூரில் ஆவின் பால் பண்ணை உள்ளது. இங்கு தினமும் 4 லட்சம் லிட்டருக்கும் மேல் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் ஐஸ்கிரீம், பால்பவுடர், இனிப்புகள் உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

கனமழை காரணமாக பால்பண்ணை நிலையத்துக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் கடந்த மாதம் 16-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு பால் உற்பத்தி பாதிக்கப்பட்டது. வெள்ளம் வடியத் தொடங்கியதும் மீண்டும் பால் உற்பத்தி தொடங்கியது.

இந்நிலையில், கடந்த 1-ம் தேதி பெய்த பலத்த மழை காரணமாக ஆவின் பால் பண்ணையை மீண்டும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், ஊழியர்களால் இயந்திரங்களை இயக்க முடியவில்லை.

இதன் காரணமாக, மீண்டும் கடந்த 3 நாட்களாக பால்பண்ணையில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், ஆவின் பால் தாராளமாக கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இங்கு பால் உற்பத்தி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

13 mins ago

தமிழகம்

1 hour ago

கார்ட்டூன்

2 hours ago

இந்தியா

1 hour ago

வர்த்தக உலகம்

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

உலகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

10 hours ago

சினிமா

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்