கரோனாவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் குணமடைந்து வரும் நிலையில் தமிழகத்தில் சித்த மருத்துவத்தில் உயிரிழப்பு இல்லை: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பெருமிதம்

By செய்திப்பிரிவு

கரோனாவில் இருந்து ஆயிரக் கணக்கானோர் குணமடைந்து வரும் நிலையில் தமிழகத்தில் சித்த மருத்துவத்தில் உயிரிழப்பு இல்லை என்பது பெருமைக்குரியதாகும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

தமிழகத்தில் கரோனா முதல் அலை பரவியபோது அதற்கான மருந்தாக ‘கபசுர’ குடிநீரை பயன் படுத்தலாம் என முதன் முதலாக திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் அரசு சித்த மருத்துவப்பிரிவு தெரிவித்தது. அதன்படி, கரோனா நோயாளி களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய போது அவர்கள் விரைவாக கரோனா தொற்றில் இருந்து மீண்டனர்.

இதைத்தொடர்ந்து, நோயாளி களுக்கு மட்டும் இன்றி பொது மக்கள் எல்லோரும் கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீரை பருக தொடங்கினர். அதன்பிறகு, சித்த மருத்துவத்தை பெரும்பாலான மக்கள் பின்பற்றி வருகின்றனர். தற்போது, கரோனா 2-வது அலை பெருகி வரும் நிலையிலும் சித்த மருத்துவம் மூலம் சிகிச்சை பெற்று வருவோர்களே அதிக அளவில் குணமடைந்து வீடு திரும்புவதாக கூறப்படுகிறது.

இதனால், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கரோனாவுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்க ஏற் பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட் டத்தில் 4 இடங்களில் கரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சித்த மருத்துவ ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் வி.விக்ரம்குமார் வரவேற்றார். வேலூர் புற்று மகரிஷி மருத்துவமனையின் சித்த மருத்துவர் டி.பாஸ்கரன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்தார்.

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை திறந்து வைத்துப் பேசும்போது, "திருப்பத்தூர் மாவட்டத்தில் சித்த மருத்துவ சிகிச்சையால் ஆயிரக்கணக்கான கரோனா நோயாளிகள் குணமடைந் துள்ளனர். சித்த மருத்துவத்தில் உயிரிழப்பு இல்லை என்பது பெருமைக்குரியதாகும். திமுக எதிர்கட்சியாக இருந்தபோதே கரோனாவை விரட்ட சித்த மருத்துவ முறையை அதிகரிக்க வேண்டும் என குரல் கொடுத்தது.

அதன்படி, தற்போது திமுக ஆட்சிக்கு வந்த உடன் தமிழகத்தில் நிறைய இடங்களில் சித்த மருத்துவ முறை பின்பற்றப்பட்டு வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும் 4 இடங்களில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, கரோனா நோயாளிகளுக்கு பிராணவாயு சீராக இருக்க கிராம்பு குடிநீர், நுரையீரல் பாதிப்பை தடுக்க கன்டங்கத்திரி மூலிகை சூப் உள்ளிட்டவைகள் அறிமுகப்படுத் தப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி யோகா ஆசிரியர்கள் மூலம் தினசரி யோகா பயிற்சியும் நோயாளி களுக்கு அளிக்கப்பட உள்ளன.

தமிழகம் முழுவதும் சித்த மருத்துவ முறையை விரிவுப்படுத்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி யுள்ளார். முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா, திமுக முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் ஆகி யோர் சித்த மருத்துவத்தை பெரிய அளவில் பின்பற்றியவர்கள்.

நானும் கூட சித்த மருத்துவ சிகிச்சையை எடுத்துள்ளேன். மஞ்சள் காமாலை சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சித்த மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற போது, அவர் சில மருந்துகளை எனக்கு கொடுத்தார். அது பற்றி விளக்கம் கேட்டபோது, அவர் பதில் கூற மறுத்தது மட்டும் அல்லாமல் அது ரகசியம் எனக்கூறிவிட்டார்.

சித்த மருத்துவ முறையில் வெளிப்படை தன்மை இல்லாத தால் சித்த மருத்துவம் மங்கிப் போய்விட்டது. வேலூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எனக்கு சித்த மருத்துவம் குறித்த புத்தகம் ஒன்றை பரிசாக கொடுத்தார்கள். அதை நான் வீட்டுக்கு சென்றவுடன் முழுவதுமாக படித்தேன். அதில் எந்த தகவலும் புரியும்படி கிடைக்க வில்லை. சித்த மருத்துவம் குறித்து தெளிவான வழிகாட்டுதல் இல்லாததால் தமிழகத்தில் சித்த மருத்துவம் பின்தங்கிய நிலை யிலேயே உள்ளது. இதை போக்க சித்த மருத்துவர்கள் முயற்சி எடுக்க வேண்டும். நம் பாரம்பரியம் மிக்க சித்த மருத்துவம் உலகளவில் பரவ வேண்டும் என்பதே நம் எல்லோரின் விருப்பமாக உள்ளது’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கதிர் ஆனந்த் (வேலூர்), அண்ணாதுரை (தி.மலை), திருப்பத்தூர் எஸ்பி டாக் டர் விஜயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யாபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் நல்லதம்பி (திருப்பத்தூர்), அ.செ.வில்வநாதன்(ஆம்பூர்),தேவராஜ் (ஜோலார்பேட்டை), அமலு (குடியாத்தம்), வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, ஆம்பூர் வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன், நகராட்சி ஆணையாளர் சவுந்திரராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

க்ரைம்

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

க்ரைம்

7 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்