விருப்ப ஓய்வு மனு மீது 3 மாதத்தில் முடிவு எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

நெல்லை மனோண்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கணினி பயிற்சியாள ராகப் பணிபுரிந்தவர் ஏ.பி.சாந்தினி. இவர் 3.10.2002-ல் விருப்ப ஓய்வு கேட்டு விண் ணப்பித்தார். இதை இதுவரை ஏற்காத தால், தனக்கு விருப்ப ஓய்வு வழங்கி அனைத்து பணப்பலன்களையும் வழங்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இதை விசாரித்து நீதிபதி டி.ஹரிபரந் தாமன் பிறப்பித்த உத்தரவு: தமிழக அரசு ஊழியர்களுக்கான பணி விதிகளை பல்கலைக்கழகம் பின்பற்றுவதாக பல் கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது. அரசு ஊழியர்கள் பணி விதியில், ஊழியர் ஒருவர் விருப்ப ஓய்வு கேட்டு மனு அளித்து, அதன் மீது 3 மாதங்களில் உத்தரவு பிறப்பிக்காவிட்டால், அந்த ஊழி யர் தானாகவே விருப்ப ஓய்வு பெற்ற தாகக் கருத வேண்டும் எனக் கூறப்பட்டுள் ளது. அதை வைத்து பார்க்கும்போது மனுதாரர் விருப்ப ஓய்வு கேட்டு 2002-ல் மனு அளித்துள்ளார். இதனால் அவருக்கு விருப்ப ஓய்வு வழங்கியதாகக் கருதி, அவருக்கு வழங்க வேண்டிய அனைத்து பணப்பலன்களையும் 8 வாரங்களில் வழங்க வேண்டும் என நீதிபதி கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

விளையாட்டு

6 hours ago

க்ரைம்

6 hours ago

உலகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வேலை வாய்ப்பு

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

கல்வி

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்