கரோனா தொற்று சிகிச்சைக்காக 1 லட்சம் ஆக்சிஜன் செறிவூட்டிகள்: வெளிநாட்டில் இருந்து வாங்குகிறது ஓஎன்ஜிசி

By செய்திப்பிரிவு

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து1 லட்சம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வாங்க ஆர்டர் கொடுத்துள்ளதாக ஓஎன்ஜிசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக எண்ணெய், இயற்கை எரிவாயு நிறுவனம் (ஓஎன்ஜிசி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இத்தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் அதிக அளவு தேவைப்படுகிறது. இத்தொற்றை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், அதற்கு உதவும் பணியில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அதன்படி, 1 லட்சம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்ய உள்ளது.

முதல்கட்டமாக 34,673 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வாங்க சர்வதேச நிறுவனங்களிடம் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 2,900செறிவூட்டிகள் வரும் 21-ம் தேதிக்குள் டெலிவரி செய்யப்படும். மற்றவை வரும் ஜூன் மாத இறுதிக்குள் டெலிவரி செய்யப்படும்.

இதுதவிர, உள்நாட்டு நிறுவனங்களிடம் இருந்து 40 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வாங்கவும் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. 10 அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆலைகளை நிறுவவும் ஓஎன்ஜிசி உதவி செய்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

இந்தியா

8 mins ago

இந்தியா

20 mins ago

இந்தியா

30 mins ago

இந்தியா

38 mins ago

சுற்றுச்சூழல்

48 mins ago

இந்தியா

51 mins ago

இந்தியா

58 mins ago

இந்தியா

43 mins ago

விளையாட்டு

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்