ஓராண்டாக உண்டியலில் சேமித்து வைத்த பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுமிகள்: திருப்பத்தூர் எஸ்பி., டாக்டர் விஜயகுமார் பாராட்டு

By செய்திப்பிரிவு

திருப்பத்தூரைச் சேர்ந்த சிறுமிகள் கடந்த ஓராண்டாக உண்டியலில் சேமித்து வந்த பணத்தை முதலமைச்சரின் கரோனா நிவாரண நிதிக்காக எஸ்பி., டாக்டர். விஜயகுமாரிடம் நேற்று வழங்கினர்.

தமிழகத்தில் பெருகி வரும் கரோனா தொற்றால் பல்லாயிரக் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா பெருந்தொற்று தமிழகத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா நோயாளிகளுக்காக மருத்துவ செலவுக்கு தமிழக மக்கள் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதன்பேரில், ஏராளமான மக்கள் தங்களால் முடிந்த நிதியுதவியை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கி வருகின்றனர். அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகரத்தைச் சேர்ந்த குமார் - சுதா தம்பதியின் மகள் களான அர்ஷீதா (7), சந்தியா (5) ஆகியோர் கடந்த ஓராண்டாக பெற்றோர் கொடுத்த செலவுப்பணத்தை உண்டியலில் சேமித்துவந்தனர். அந்த பணத்தை முதலமைச்சரின் கரோனா நிவாரண நிதிக்கு வழங்க சிறுமிகள் முன் வந்தனர்.

இதைத்தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் டாக்டர் விஜயகுமாரை நேரில்சந்தித்த அர்ஷீதா, சந்தியா ஆகியோர் தங்களது பெற்றோர் முன்னிலையில், தாங்கள் ஓராண் டாக உண்டியலில் சேமித்து வந்த தொகை 1,095 ரூபாயை வழங்கினர்.

சிறுமிகளின் இந்த செயலுக்கு எஸ்பி., டாக்டர்.விஜயகுமார் பாராட்டு தெரிவித்தார்.

கரோனா நோயாளி களுக்காக மருத்துவ செலவுக்கு தமிழக மக்கள் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 mins ago

சுற்றுச்சூழல்

31 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

4 hours ago

வலைஞர் பக்கம்

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்