முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு மாத சம்பளத்தை வழங்கிய நடத்துநர்

By செய்திப்பிரிவு

நாமக்கல்: கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு திருச்செங்கோட்டைச் சேர்ந்த அரசுப் பேருந்து நடத்துநர் தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை பணிகளுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பொதுமக்கள் தாரளமாக நிதி வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் நடத்துநராக பணிபுரியும் நேசமணி, தனது ஒரு மாத சம்பளமான ரூ.33 ஆயிரத்துக்கு காசோலை எடுத்து முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “கரோனா தடுப்பு பணிக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அனைவரும் நிதி வழங்க வேண்டும். இதன்மூலம் அரசின் நிதி சுமை குறையும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

19 mins ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

உலகம்

9 hours ago

ஆன்மிகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்