தமிழக முதல்வராக பதவியேற்கும் ஸ்டாலினுக்கு பால் தினகரன் வாழ்த்து

By செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு காருண்யா நிகர்நிலை பல்கலைக் கழகத்தின் வேந்தரும், இயேசு அழைக்கிறார் மற்றும் சீஷா தொண்டு நிறுவன தலைவருமான பால் தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது வாழ்த்துச் செய்தியில், “மு.க.ஸ்டாலின் சென்னையை சிங்கார சென்னை யாக மாற்றியவர். தான் சொல்வதையெல்லாம் மக்களின் நலன் கருதி செவ்வனே செய்து முடிப்பவர். பலகோடி மக்களின் நலன் காக்கவும், அனைத்து தரப்பு மக்கள் மகிழ்ச்சியடையவும் விடியலாக திகழ்கிறார்.

சென்னை, அடையாறில் எனது தந்தை நினைவாக டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலையை நிறுவியவர். முதல்வராக பதவியேற்கும் மு.க.ஸ்டாலின் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

25 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

வணிகம்

10 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

சுற்றுலா

3 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுலா

4 hours ago

மேலும்