25 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக - திமுக நேரடியாக மோதிய தொண்டாமுத்தூர்; 'ஹாட்ரிக்' வெற்றி பெற்ற எஸ்.பி.வேலுமணி

By க.சக்திவேல்

25 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக - திமுக நேரடியாக மோதிய தொண்டாமுத்தூரில் எஸ்.பி.வேலுமணி 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றுள்ளார்.

கோவை, தொண்டாமுத்தூர் தொகுதியில் கடைசியாக 1996-ம் ஆண்டு திமுக, அதிமுக வேட்பாளர்கள் நேரடியாகப் போட்டியிட்டனர். அப்போது, திமுக சார்பில் போட்டியிட்ட சி.ஆர்.ராமச்சந்திரன் வெற்றி பெற்றார்.

அதன்பிறகு, தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்), மதிமுக வேட்பாளர்களும், 2009 இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரும் வெற்றி பெற்றனர். 2011, 2016-ம் ஆண்டு எனத் தொடர்ந்து 2 முறை எஸ்.பி.வேலுமணி இங்கு வெற்றி பெற்றார்.

25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முறைதான் திமுக, அதிமுக வேட்பாளர்கள் நேரடியாகக் களம் கண்டனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு கூட்டணிக்குத் தொகுதியை ஒதுக்காமல் இந்த முறை நேரடியாகக் களம் கண்டதாலும், இத்தொகுதியில் திமுக தலைமை தனி கவனம் செலுத்தியதாலும், தமிழகத்தில் கவனிக்கப்பட்ட முக்கியத் தொகுதிகளில் ஒன்றாக இடம்பெற்றது தொண்டாமுத்தூர்.

திமுக சார்பில் கட்சியின் சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, காங்கேயம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். தொண்டாமுத்தூரில் போட்டியாளர் வலுவாக இருக்க வேண்டும் என்பதால், அவரை இங்கு களமிறக்கியது திமுக.

'கார்த்திகேய சிவசேனாதிபதி வெளியூர்க்காரர்' என்பதை வைத்து அதிமுகவினர் பிரச்சாரம் செய்தனர். எஸ்.பி.வேலுமணி மீதான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, கார்த்திகேய சிவசேனாபதி பிரச்சாரம் செய்தார்.

இருதரப்பினரும் போட்டிபோட்டு பிரச்சாரத்தில் தீவிரம் காட்டினர். இந்நிலையில், எஸ்.பி.வேலுமணிக்கு, கார்த்திகேய சிவசேனாபதி நெருக்கடி கொடுப்பாரா என்ற கேள்விக்கு மத்தியில் நேற்று (மே 03) தேர்தல் முடிவுகள் வெளியாகின.

இதில், எஸ்.பி.வேலுமணி 1 லட்சத்து 24 ஆயிரத்து 225 வாக்குகளும், கார்த்திகேய சிவசேனாபதி 82 ஆயிரத்து 595 வாக்குகளும் பெற்றனர். 41 ஆயிரத்து 630 வாக்குகளில் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டார் எஸ்.பி.வேலுமணி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

53 mins ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

வணிகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்