காளிமலை அம்மன் கோயிலுக்கு செல்லத் தடை: வீடுகளின் முன் பொங்கலிட்ட பக்தர்கள்

By செய்திப்பிரிவு

கரோனா காரணமாக காளிமலை அம்மன் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டதால், சித்ரா பவுர்ணமியன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளின் முன் பொங்கலிட்டு பக்தர்கள் வழிபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக, கேரள எல்லைப் பகுதியான பத்துகாணியில் கடல் மட்டத்தில் இருந்து 3,500 அடி உயரத்தில் காளிமலை அம்மன் கோயில் உள்ளது.

இந்த மலையில் அகஸ்தியர் தவம் செய்து, மும்மூர்த்திகளை தரிசனம் செய்ததாகவும், மன்னர் மார்த்தாண்ட வர்மாவை எதிரிகள் துரத்தியபோது காளிமலை அம்மன் காப்பாற்றியதாகவும் புராணங்களில் கூறப்படுகிறது. ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியன்று கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் காளிமலை கோயிலில் பொங்கல் வைத்து அம்மனை வழிபடுவர்.

கரோனா கட்டுப்பாடுகளால் காளிமலை அம்மன் கோயிலுக்கு செல்ல முடியாத நிலையில், பக்தர்கள் தங்கள் வீட்டின் முன்பே பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.

காளிமலை சேவாசமிதி சார்பில் மாவட்டம் முழுவதும் பரவலாக பொங்கல் இடப்பட்டன. நாகர்கோவிலில் மட்டும் 2,408 வீடுகளில் சமூக இடைவெளியுடன் பொங்கல் இடப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தொழில்நுட்பம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

9 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

மேலும்