மழையால் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி தீவிரம்

By செய்திப்பிரிவு

சென்னையில் மழையால் பழுத டைந்த சாலைகளை சீரமைக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

சமீபத்தில் சென்னையில் பெய்த கனமழையால் மாநகரம் முழுவ தும் வெள்ளக் காடாகி, பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இரு வாரங்களில் மட்டும் 100 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. 16-ம் தேதி மட்டும் 25 சென்டி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது. இதனால் மாநகரின் பல்வேறு சாலைகள் பழுதடைந்தன.

மழை விட்டதைத் தொடர்ந்து 18-ம் தேதிக்கு பிறகு சாலை சீரமைக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் துரிதமாக மேற்கொண்டு வருகிறது. சாலையில் ஏற்பட்டுள்ள சிறிய மற்றும் பெரிய பள்ளங்கள் ஆகியவை, சிமெண்ட் கலந்த வெட் மிக்ஸ் கலவைகள், குளிர் தார் கலவை மற்றும் சிமெண்ட் கான்கிரீட் கொண்டு சீரமைக்கப்பட்டு வருகி றது.

அண்ணாநகர் சாந்தி காலனி சாலை, அயனாவரம் குன்னூர் சாலை, கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை, மாதவரம் திருவள்ளூர் சாலை போன்ற பகுதிகளில் நேற்று சாலை சீரமைக்கும் பணியை மாநக ராட்சி நிர்வாகம் மேற்கொண்டது.

மழையிலும் சீரமைப்புப் பணி

நேற்று திடீரென மழை பெய்த நிலையில், மழைக்கு இடையே சாலை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘எங்கள் பணியை பாதிக்கும் அளவுக்கு மழை பெய்யவில்லை. அதனால் எங்கள் பணிகளை நாங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். நாங்கள் போடும் சிமென்ட் கலவைகள் விரைவாக இறுகும் தன்மை கொண்டது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்