கொடைக்கானலில் 6 நாள் ஓய்வு முடிந்தது- சென்னை புறப்பட்டார் மு.க.ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

கொடைக்கானலில் 6 நாட்கள் ஓய்வுக்குப் பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை காரில் மதுரை சென்று, அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டார்.

கடந்த 16-ம் தேதி சென்னையில் இருந்து தனி விமானங்கள் மூலம்தனது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின், மகள்செந்தாமரை, மருமகன் சபரீசன் உள்ளிட்ட குடும்பத்தினர் 16 பேருடன் மதுரை வந்த மு.க.ஸ்டாலின், அங்கிருந்து திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சென்றார்.

கொடைக்கானல் பாம்பார்புரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அவர்கள் தங்கினர். தொடர்ந்து 3 நாட்கள் விடுதி அறையைவிட்டு வெளியில் வராமல் ஓய்வெடுத்தனர்.

கடந்த திங்கள்கிழமை விடுதியில் இருந்து கார் மூலம் கொடைக்கானல் மேல்மலைப் பகுதியானமன்னவனூர், கூக்கால் மலைக்கிராமத்துக்கு குடும்பத்தினருடன் சென்ற மு.க.ஸ்டாலின், அங்குள்ள மத்திய அரசின் செம்மறி ஆடுகள் உரோம ஆராய்ச்சிப் பண்ணை மற்றும் முயல் பண்ணை, மன்னவனூர் ஏரி, கூக்கால் ஏரி ஆகிய இடங்களை கண்டு ரசித்தார்.

4 நாட்கள் தங்கியிருந்த நிலையில் உதயநிதி, கிருத்திகா உதயநிதி உள்ளிட்ட 11 பேர்கடந்த திங்கள்கிழமை சென்னைபுறப்பட்டனர். மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் உள்ளிட்டோர் மேலும் 2 நாட்கள் கொடைக்கானலிலேயே தங்கி இருந்தனர்.

இந்நிலையில், 6 நாட்கள் ஓய்வுக்குப் பிறகு ஸ்டாலின் நேற்றுமாலை கார் மூலம் கொடைக்கானலில் இருந்து மதுரை விமான நிலையம் புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து தனி விமானம் மூலம் நேற்று இரவு சென்னை சென்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

12 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்