கரோனா தொற்றுக்கு ஆயுர்வேத மருந்து; க்ளெவிரா மாத்திரை மற்றும் சிரப்: அபெக்ஸ் லேபரட்டரி நிறுவனம் அறிமுகம்

By செய்திப்பிரிவு

கரோனா தொற்றுக்கு ஆயுர்வேத மருந்தான க்ளெவிரா மாத்திரை மற்றும் சிரப்பை அபெக்ஸ் லேபரட்டரி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இது தொடர்பாக நிறுவன இயக்குநர்கள் சுபாஷினி வணங்காமுடி, விசாகம் வணங்காமுடி, மேலாளர் மருத்துவர் ஆர்தர் பால் ஆகியோர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: லேசான, மிதமான கரோனா தொற்றுக்கு அபெக்ஸ் நிறுவனம் க்ளெவிரா மாத்திரை மற்றும் சிரப்பை அறிமுகம் செய்துள்ளது. இந்த மருந்து முதல்கட்டமாக ஆய்வகம் மற்றும் விலங்குகளிடம் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சிறந்த முடிவு வந்ததால், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100 கரோனா நோயாளிகளுக்கு கொடுத்து, பரிசோதனை செய்யப்பட்டது. மருந்துகொடுக்கப்பட்ட 5 நாட்களில் 86 சதவீத தொற்றும், 10 நாட்களில் 100 சதவீத தொற்றும் குணமாகியது. இந்த மருந்துக்கு இந்திய மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிக் கழகம், ஆயுஷ் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளன.

க்ளெவிரா மாத்திரையை காலை, இரவு உணவுக்குப் பின் உட்கொள்ளவேண்டும். அதேபோல, சிரப்பை காலை, மாலையில் 10 எம்.எல். பருகவேண்டும். இவற்றால் எந்த பக்க விளைவுகளும் இல்லை. ஒரு மாத்திரையின் விலை ரூ.11. மருத்துவர்களின் பரிந்துரைபடி மருந்தை உட்கொள்ள வேண்டும். மத்திய, மாநில அரசுகள் க்ளெவிரா மருந்தை கொள்முதல் செய்து,கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும்.

இந்த மருந்து, பப்பாளி, காட்டுவேம்பு, நிலவேம்பு, காட்டுப் பேய் புடல், கோரைக் கிழங்கு, இஞ்சி, மிளகு, பற்படாகம், சிந்திவ் கொடி போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். அலோபதி மருத்துவர் சிஎம்கே ரெட்டி, ஆயுர்வேதா மருத்துவர் தர்மேஷ் குபேந்திரன், சித்த மருத்துவர் சதீஷ் உடனிருந்தனர். 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்