கரோனா அச்சத்தால் சொந்த ஊர்களுக்குச் செல்ல சென்ட்ரலில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், இங்கு பணியாற்றி வரும் வடமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வதற்காக 2-வது நாளாக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று குவிந்தனர்.

தமிழகத்தில் சில நாட்களாக தினசரி கரோனா பாதிப்பு 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. பல இடங்களில்தொழிலாளர்களுக்கு கரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால், சிலதொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதற்கிடையே வடமாநிலத் தொழிலாளர்கள் சிலர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வதால் சென்னை சென்ட்ரல் ரயில்நிலைய வளாகத்தில் 2-வது நாளாகநேற்றும் கூட்டம் அதிகமாக இருந்தது.

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, ‘‘பல்வேறு மாநிலங்களிலும் கரோனா அச்சம் இருந்து வருவதால், தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் செல்கின்றனர். இருப்பினும், ரயில்களின் சேவையில் எந்த மாற்றமும் செய்யவில்லை’’ என்றனர்.

வடமாநில தொழிலாளர்கள் கூறும்போது, ‘‘ கரோனா வேகமாக பரவி வருவதால், எந்த நேரத்திலும் வேலைகள் முழுவதும் நிறுத்தப்பட வாய்ப்புஉள்ளது. கடந்த முறை நாங்கள் ஊர்களுக்கு செல்ல மிகவும் கஷ்டப்பட்டோம். தற்போது ரயில் சேவை இருப்பதால், இப்போதே சொந்த ஊர்களுக்குச் செல்கிறோம்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

22 mins ago

வலைஞர் பக்கம்

25 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

31 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்