தஞ்சாவூர் வாக்கு எண்ணும் மையத்தில் செயல்படாத கண்காணிப்பு கேமராக்கள் மாற்றம்: திமுக வேட்பாளர்களின் புகார் மீது ஆட்சியர் உடனடி நடவடிக்கை

By செய்திப்பிரிவு

தஞ்சாவூரில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் செயல்படவில்லை என 3 தொகுதிகளின் திமுக வேட்பாளர்கள் புகார் தெரிவித்த தைத் தொடர்ந்து, செயல்படாத கண்காணிப்பு கேமராக்களை உடனடியாக மாற்ற ஆட்சியர் நடவடிக்கை எடுத்தார்.

கடந்த ஏப்.6-ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு தொகுதிகளில் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக் கப்பட்டுள்ளன.

இந்த வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு மையத்தில், திமுக வேட்பாளர்களான தஞ்சாவூர் டி.கே.ஜி.நீலமேகம் எம்எல்ஏ, திருவையாறு துரை.சந்திரசேகரன் எம்எல்ஏ, ஒரத்தநாடு எம்.ராமச்சந்திரன் எம்எல்ஏ ஆகியோர் நேற்று மதியம் பார்வையிட்டனர்.

அப்போது, சிசிடிவி கேமராக்கள் முறையாக செயல்படுகின்றனவா என ஆய்வு செய்த அவர்கள், நுழைவு வாயிலில் உள்ள கண் காணிப்பு கேமராக்கள் செயல் படாததால், 360 டிகிரி கோணத்தில் சுழலும் சிசிடிவி கேமராக்களை புதிதாக அமைக்க வேண்டும் என அங்கிருந்த வட்டாட்சியர்கள் பாலசுப்பிர மணியன்(தஞ்சாவூர்), நெடுஞ் செழியன்(திருவையாறு), அருணகிரி(ஒரத்தநாடு) ஆகியோ ரிடம் வலியுறுத்தினர். தொடர்ந்து, ஆட்சியர் ம.கோவிந்தராவிடம் செல்போனில் பேசி தங்களின் கோரிக்கையைத் தெரிவித்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் துரை.சந்திரசேகரன் கூறியது:

இந்தக் கல்லூரி நுழைவு வாயிலில் உள்ள சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லை. அவை உடனடியாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது, இந்தக் கல்லூரி தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் வெளிநபர்கள் அடிக்கடி வந்து செல்கின்றனர். இது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அவர்கள் வருவதற்கு தடை விதிக்க வேண்டும். மேலும், கல்லூரி வளாகத்தில் உள்ள 5 டிஷ் ஆன்டெனாக்களையும் உடன டியாக அகற்ற வேண்டும் என்றார்.

பின்னர், இதுதொடர்பாக ஆட்சி யர் ம.கோவிந்தராவ் கூறியது:

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே செல்ல முடியும். 24 மணி நேரமும் துணை ராணுவத்தினர், போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வேட்பாளர்களின் முகவர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தினமும் வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர்.

ஏற்கெனவே இருந்த கண்கா ணிப்பு கேமராக்கள் அகற்றப் பட்டு, தற்போது தரம் உயர்ந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள் ளன. அதேபோல, கல்லூரி வளா கத்தில் இருந்த டிஷ் ஆன்டெனாக் களும் அகற்றப்பட்டுவிட்டன. தொடர்ந்து, கண்காணிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறோம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்