கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு யோகா, இயற்கை வாழ்வியல் முறை சிகிச்சை: தருமபுரி மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு

By செய்திப்பிரிவு

தருமபுரி மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு யோகா, இயற்கை வாழ்வியல் முறை சிகிச்சை மற்றும் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஒருபுறம் தொற்று பாதிப்புக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பது போலவே, குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்கு சேர்க்கப்படு வோருக்கு பல்வேறு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.அத்துடன், யோகா, இயற்கை வாழ்வியல் முறை சிகிச்சைகள் மற்றும் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிகிச்சைக்கான சிறப்பு பிரிவு மற்றும் நல்லானூர் தனியார் பொறியியல் கல்லூரியில் செயல்படும் கரோனா சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்துதல் மையத்தில் தங்கி சிகிச்சை பெறுவோருக்கு இவ்வகை சிகிச்சை மற்றும் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

நல்லானூர் தனியார் கல்லூரி முகாமில் தற்போது தொற்றுக்கு உள்ளான 75-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு பென்னாகரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் யோகா மற்றும் இயற்கை மருத்துவ வாழ்வியல் மையம் சார்பில் தினமும் சிகிச்சை மற்றும் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

நுரையீரலை பலப்படுத்தும் எளிய மூச்சுப் பயிற்சி, யோகா கற்றுத் தரப்படுகிறது. மேலும், மூக்கு கழுவும் முறை, உப்பு கலந்த சூடான நீரில் வாய் கொப்பளிக்கும் முறை, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும் உணவுகள் தொடர்பான ஆலோசனைகள், சூரிய ஒளிக் குளியல் மற்றும் நீராவி பிடித்தல் உள்ளிட்ட பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல, யோகா மற்றும் இயற்கை மருத்துவத்துறை மூலம் தயாரிக்கப்படும் நோய் எதிர்ப்பு சக்தி தரும் சூடான மூலிகை பானமும் வழங்கப்படுகிறது.

இப்பயிற்சிகளை, பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையின் யோகா மற்றும் இயற்கை மருத்துவ வாழ்வியல் மையத்தின் உதவி மருத்துவ அலுவலர் மருத்துவர் முனுசாமி ஒருங்கிணைத்து வழங்கி வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

சினிமா

13 mins ago

இந்தியா

53 mins ago

வர்த்தக உலகம்

1 hour ago

ஆன்மிகம்

19 mins ago

இந்தியா

29 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

மேலும்