ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர்களாக இருந்த ஐஏஎஸ் அதிகாரிகள் 9 பேருக்கு கட்டாய ஓய்வளிக்க வேண்டும்: மாநில தகவல் ஆணையம் பரிந்துரை

By செய்திப்பிரிவு

ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவராக கடந்த 2011 ஜூன் முதல் 2020 அக் டோபர் வரை பணியாற்றிய 9 ஐஏஎஸ் அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்புமாறு தலைமைச் செயலருக்கு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

இதுதொடர்பாக மாநில தகவல் ஆணையர் சு.முத்துராஜ் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

ஆசிரியர் தேர்வு வாரிய பொது தகவல் அலுவலருக்கு எதிராக வே.கவுதமன் உள்ளிட்ட 5 பேர் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்துள்ளனர். மனுதாரர்கள் அனைவரும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர், உதவி பேராசிரியர் பணிக்காக நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகளில் பங் கேற்றவர்கள். தேர்வுகளில் அவர்கள் சரியான விடை அளித்துள்ள போதிலும், அவை தவறு என்று கூறி குறைந்த மதிப் பெண் வழங்கப்பட்டதால், சம்பந்தப்பட்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் வாய்ப்பை இழந்தவர்கள். இதை ஆணைய விசாரணைகளில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மீண்டும் மீண்டும் தவறுகள்

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பணி யாற்றும் ஊழியர்கள் முதல் தலைவர்கள் வரை வினாத்தாள், விடைக்குறிப்பு தயார் செய்தவர்கள், விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் என அனைவருமே யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி அல்லது ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டவர்கள். அவர் களுக்கு போட்டித் தேர்வுகளில் அனுபவம் இருக்கும். வாரியங்கள், தேர்வாணை யங்களில் ஒருமுறை தவறு நடந்தால், அடுத்தமுறை மீண்டும் அதேபோல நடக்காமல் பார்த்துக்கொள்வது அதன் தலைமை பொறுப்புகளில் இருப்பவர் களின் கடமை.

ஆனால், ஒவ்வொரு போட்டித் தேர்விலும் தவறான வினாக்கள், விடைக் குறிப்புகள் வெளியிடுவது, தேர்வுகளில் தாமதம், ரத்து செய்வது போன்ற தவறுகள் மீண்டும் மீண்டும் நடக்கின்றன.

இதன்மூலம், ஆசிரியர் தேர்வு வாரியம் தனது பணியை சரிவர செய்யவில்லை என்பது தெரிகிறது.

தகவல் உரிமை சட்டப்படி, பொறுப்புடைமை, வெளிப்படைத் தன்மை, ஊழல் அல்லாத நிர்வாகம் ஆகியவற்றை உறுதிப்படுத்த தவறியது மற்றும் மக்களுக்கு தகவல் பெறும் உரிமையை முழுமையாக வழங்காத பொது அதிகார அமைப்புகளின் அதி காரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு பரிந்துரைக்க தகவல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது.

9 அதிகாரிகள் யார்?

ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் களாக இருந்தவர்கள், சட்ட விதிகளின்படி சரியாக செயல்படாததாலும், பாதிக்கப் பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங் காததாலும், மாணவர்களின் கட்டணம், அரசு நிதி ஆகியவை விரயம் செய்யப் பட்டதாலும், அரசுக்கு கெட்ட பெயர் ஏற் படுத்தியதாலும், கடந்த 2011 ஜூன் முதல் 2020 அக்டோபர் வரை, ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பதவியில் இருந்த சுர்ஜித் கே.சவுத்ரி, விபு நய்யர், காக்கர்லா உஷா, டி.ஜெகந்நாதன், கே.சீனிவாசன், கே.நந்தகுமார், எஸ்.ஜெயந்தி, என்.வெங்கடேஷ், ஜி.லதா ஆகிய 9 ஐஏஎஸ் அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்புவதற்கான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள தலைமைச் செயலருக்கு தகவல் ஆணையம் பரிந் துரைக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 min ago

சினிமா

6 mins ago

சினிமா

9 mins ago

வலைஞர் பக்கம்

13 mins ago

சினிமா

18 mins ago

சினிமா

23 mins ago

இந்தியா

31 mins ago

க்ரைம்

28 mins ago

இந்தியா

34 mins ago

தமிழகம்

56 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்