திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட 15 பேருக்கு கரோனா? - அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட 15 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தி.மலை மாவட்டத்தில் நடை பெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் 13,800 ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஈடுபட் டிருந்தனர். இவர்களில் சிலருக்கு காய்ச்சல் இருந்ததாக கூறப்படு கிறது. இருப்பினும், அதனை பொருட்படுத்தாமல் தேர்தல் பணியை தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில், வாக்குப் பதிவு முடிந்ததும் காய்ச்சல்போன்றவற்றால் பாதிக்கப்பட்டி ருந்தவர்கள், கரோனா பரிசோதனை செய்துள்ளனர். அவர்களில், 15-க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் சிலர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், ஒரு சிலர் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனால், திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் உட்படசில அலுவலகங்களில் பணி செய்ய அவர்கள் நேற்று வரவில்லை. இதனால், அலுவலகங்களில் ஊழியர் களின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

இது குறித்து வருவாய்த் துறைஉயர் அதிகாரிகள் கூறும்போது, “தேர்தல் பணியில் ஈடுபடுபவர் களை கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தி வந்தோம். அவர்களில் பலர் போட்டுக் கொண்டுள்ளனர். இருப்பினும், தொடர் பணிகாரணமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பதாக தெரியவருகிறது. காய்ச்சல் இருப்பவர்களை, நாங்கள் தொடர்ந்து பணி செய்ய அனுமதிக்கவில்லை” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

14 mins ago

வலைஞர் பக்கம்

34 mins ago

இந்தியா

46 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

மேலும்