காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை குறுக்கே கால்வாய் வெட்டப்பட்டது: போக்குவரத்தை திருப்பியதால் காஞ்சியில் நெரிசல்

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல் வேறு பகுதிகள் மழையின் தீவிரத் தால் வெள்ளத்தில் மிதக்கிறது. குடியிருப்புப் பகுதிகளை சூழ்ந் துள்ள தண்ணீரை வெளியேற்று பணிகளை நெடுஞ்சாலைத்துறை யினருடன் இணைந்து நகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வரு கின்றனர்.

இந்நிலையில், செவிலி மேடு ஏரியின் உபரிநீர் வெளியேற் றத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் அருகே உள்ள ஜெம்நகர் பகு தியில் தண்ணீர் சூழ்ந்தது. மழை நின்று 2 நாட்களாகியும் வீடுக ளைச் சூழ்ந்துள்ள தண்ணீர் வடிய வில்லை.

இதையடுத்து நட வடிக்கை கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து, நெடுஞ் சாலைத்துறையினர் தற்போது காஞ்சிபுரம்-வந்தவாசி செல்லும் சாலையின் குறுக்கே பள்ள தோண்டி குழாய் புதைக்கும் பணி களை மேற்கொண்டனர். இதன் மூலம், ஜெம்நகர் பகுதியில் தேங் கியுள்ள தண்ணீர் வேகவதி ஆற்றுக்கு செல்லும் கால்வாயில் வெளியேறி வருகிறது.

அதேநேரம், காஞ்சிபுரத்தின் முக்கிய நெடுஞ்சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டப்பட்ட தால், அச்சாலையில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் காஞ்சி புரத்தில் இருந்து உத்திரமேரூர் செல்லும் சாலையில் சென்று, ஓரிக்கை அருகே உள்ள செவிலி மேடு சாலை வழியாக வந்த வாசிக்கு செல்கின்றன. இதனால், அச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுகுறித்து, நெடுஞ்சாலைத் துறையினர் கூறும்போது, குழாய் அமைக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் பள்ளம் சமன் படுத்தப்பட்டு போக்குவரத்து சீராகும்’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

உலகம்

11 hours ago

ஆன்மிகம்

11 hours ago

மேலும்