ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட பாதிப்பால் 2 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 300-க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில் 81 பேர் தீவிர சிகிசசையில் உள்ளனர். இவ்வாறு தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு, வென்டிலேட்டர் குழாய் மூலம் ஆக்சிஜன் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தீவிர சிகிச்சைப் பிரிவு அறைகளில் உள்ள குழாய்களில், ஆக்சிஜன் செல்வதில் தடை ஏற்பட்டது. இதன் காரணமாக பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக, பணியில் இருந்த டாக்டர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். எனினும், சிகிச்சை பலனின்றி இருவர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சைப் பிரிவுகளுக்குத் தேவையான ஆக்சிஜன், குழாய் மூலம் வழங்கப்படுகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு சென்ற ஆக்சிஜன் குழாயை யாரோ அடைத்து விட்டதால், சப்ளை தடைப்பட்டதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக, மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன், டாக்டர்கள், நர்ஸ்களுடன் ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து முதல்வர் தேரணி ராஜன் கூறும்போது, "ஆக்சிஜன் இணைப்பில் எந்த தடையும் ஏற்படவில்லை. ஆக்சிஜன் சப்ளையில் அழுத்த மாறுபாடு மட்டும்தான் இருந்தது. ஆக்சிஜன் முற்றிலும் தடைபட்டிருந்ததால், அங்கு சிகிச்சை பெற்றுவந்த அனைத்து நோயாளிகளும் உயிரிழந்திருப்பார்கள். எனவே, இது தவறான தகவல். அதிதீவிர உடல் நலப் பாதிப்பில் இருந்த இரண்டு பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.’’என்றார்.

மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு கூறும்போது, "ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு 60 கிலோலிட்டர் ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தட்டுப்பாடின்றி ஆக்சிஜன் வழங்கப்படுகிறது. உயிரிழந்த இருவரில் ஒருவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று, கடைசி நேரத்தில் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். அதேபோல, மற்றொருவர் தீவிர உடல் நல பாதிப்புடன் இருந்தார். இருவரும் உடல் நலப் பிரச்னையால்தான் இறந்துள்ளனர். ஆக்சிஜன் தட்டுப்பாடு போன்ற காரணங்கள், உயிரிழப்புக்கு காரணமில்லை" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

28 mins ago

இந்தியா

48 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்