வந்தவாசி ‘பாய் நகரம்’ என அறிவிக்கப்படும்: விடியல் மீட்பு பயணத்தில் ஸ்டாலின் உறுதி

By செய்திப்பிரிவு

வந்தவாசி நகரை ‘பாய்’ நகரம் என அறிவிக்கப்படும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.

திருவண்ணாமலை மாவட்டத் தில் நமக்கு நாமே விடியல் பயணம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலின் நேற்று வந்தவாசிக்கு வந்தார். அங்கு நடைபெற்ற கூட்டத்தில் பாய் உற்பத்தியாளர்கள் பேசும்போது, “விசைத்தறிக்கு திமுக ஆட்சியில் வழங்கப்பட்டு அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட 500 யூனிட் இலவச மின்சாரத்தை மீண்டும் வழங்க வேண்டும். நெசவாளர் பூங்கா அமைக்க வேண்டும். கூட்டுறவு சங்கம் மூலம் பாய் கொள்முதல் செய்யப்பட்டு அரசு மருத்துவமனை, விடுதிகளுக்கு வழங்க வேண்டும். கஞ்சித் தொட்டி திறக்கும் நிலை யில் பாய் நெசவாளர்கள் உள்ள னர். நெசவாளர்களைக் காப்பாற்ற வேண்டும்’’ என்றனர்.

அப்போது மு.க.ஸ்டாலின் பேசும் போது, “வந்தவாசி நகரில் ‘பாய்’ தொழில் வளர்ச்சிக்காக திட்டங்கள் தீட்டப்படும். வந்தவாசி நகரை ‘பாய்’ நகரம் என்று அறிவிக்கப்படும். பாய் உற்பத்திக்கு மானியம் வழங் கப்படும். வந்தவாசியில் இருந்து 4 நகரங்களை இணைக்கும் சுற்றுப் பாதை அமைக்கும் பணி மீண்டும் செயல்படுத்தப்படும்’ என்றார். பின்னர் அவர் திருவண்ணா மலைக்கு புறப்பட்டுச் சென்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

உலகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வேலை வாய்ப்பு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

மேலும்