மரக்கன்றுகளை இலவசமாக விநியோகிக்க வருமானத்தில் ஒரு பகுதியை செலவிடும் கோவை அரசுப் பேருந்து நடத்துநருக்கு பிரதமர் மோடி பாராட்டு

By க.சக்திவேல்

மரக்கன்றுகளை இலவசமாக விநியோகிக்க தனது மாத வருமானத்தில் ஒரு பகுதியைச் செலவிட்டு வரும் கோவை அரசு பேருந்து நடத்துநருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல்வானொலி நிகழ்ச்சியில் மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அதன்படி, பிரதமர் மோடி நேற்று காலை நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "கோவையில் பேருந்து நடத்துநராக பணிபுரியும் மாரிமுத்து யோகநாதன், டிக்கெட்டுடன் பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி வருகிறார். தனதுவருமானத்தில் ஒரு பகுதியை இதற்காக அவர் செலவிட்டுவருகிறார். அவரது முயற்சி களுக்கு என்னுடைய பாராட்டு கள்" என்று தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபுரம் - மருதமலை வழித்தடத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்தில் (தடம் எண்: 70) நடத்துநராக பணிபுரிந்து வருபவர் யோகநாதன். கடந்த 22 ஆண்டுகளாக நடத்துநராக பணிபுரியும் இவர், தனது இளம்வயதில் தொடங்கி கடந்த 34 ஆண்டுகளுக்கும் மேலாக மரக்கன்றுகள் நடும் பணியை ஆர்வத்துடன் செய்து வருகிறார். அதோடு, பள்ளி, கல்லூரிகள், நிறுவனங்களுக்குச் சென்று மரக்கன்றுகள் நடுவது குறித்த பயிற்சிவகுப்பும் நடத்தி வருகிறார்.

இதுதொடர்பாக நேற்று யோகநாதன் கூறியதாவது: பிரதமரின் வாழ்த்து மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் நிறைய பணிகளை மேற்கொள்ள இந்த வாழ்த்து உத்வேகம் அளிக்கும். இதுவரை நான் நட்ட மரக்கன்றுகளில் சுமார்3 லட்சம் மரங்கள் வளர்ந்துள்ளன.

எனது விடுமுறை நாட்களை மரக்கன்றுகள் நடும்பணிக்காக செலவிட்டு வருகிறேன். தேவைப்படுவோருக்கு மரக்கன்றுகளை இலவசமாக அளிக்க கோவை ஆலாந்துறையில் சொந்தமாக நர்சரி அமைத்துள்ளேன். மரக்கன்றுகளை உருவாக்க மண்,விதை, உரம், கவர்கள் போன்றவற்றை வாங்கவும், பராமரிப்பு, போக்குவரத்து செலவுக்காக மாத வருமானத்தில் 40 சதவீதம் வரை செலவிட்டு வருகிறேன்.

மரக்கன்றுகளை இலவசமாக வாங்கிச் செல்பவர்கள் சிலநேரங்களில் அதை பராமரிக்காமல் விடுவதுதான் வேதனையான விஷயம்” என்றார். சிபிஎஸ்இ 5-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் யோகநாதனின் படத்துடன், அவரது செயலைப் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்