ஆன்லைனில் ஈஷா மஹா சிவராத்திரி: ஆதியோகி, தியான லிங்கம் 4 நாட்கள் மூடல்

By செய்திப்பிரிவு

கோவை: ஈஷா அறக்கட்டளை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஈஷாவில் பிரம்மாண்டமாக நடைபெறும் மஹா சிவராத்திரி விழா, நடப்பாண்டு ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட உள்ளது.

அரசின் வழிகாட்டுதல்படி, அதிகப்படியான மக்கள் கூடுவதை கட்டுப்படுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, முன்பதிவு செய்த மிக குறைவான எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே விழாவில் நேரில் பங்கேற்க முடியும். மேலும், அவர்கள் கரோனா பரிசோதனை மேற்கொண்டு அதன் அறிக்கையை சமர்ப்பிப்பதை கட்டாயமாக்கியுள்ளோம். மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காகவும், சமூக இடைவெளியை பின்பற்றுவதற்காகவும், பங்கேற்பாளர்கள் ஆழ்ந்த தியான அனுபவத்தை பெறுவதற்காகவும் நேரில் பங்கேற்பவர்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் அனைவரும் தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் கலந்துகொள்ளலாம். மஹா சிவராத்திரி விழாவையொட்டி, ஆதியோகி மற்றும் தியான லிங்கம் மார்ச் 8-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை தற்காலிகமாக மூடப்பட்டு இருக்கும். ஆகவே, பொதுமக்கள் அந்த நாட்களில் ஈஷாவுக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மார்ச் 12-ம் தேதி காலை 10.30 மணி முதல் பொதுமக்கள் வழக்கம்போல அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

17 mins ago

ஜோதிடம்

27 mins ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

9 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்