பொட்டாஷ் உயிர் உரத்தால் கடலூருக்கு பெருமை

By க.ரமேஷ்

வேளாண் துறையின் கடலூர் உயிர் உர உற்பத்தி மையத்தில், தமிழகத்திலேயே முதல் முறையாக பொட்டாஷ் சத்தினை பயிருக்கு அளிக்கும் உயிர் உரம் தயாரிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் முதல் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு இது வழங்கப்பட்டு வருகிறது.

பயிர் வளர்ச்சிக்கு தேவையான 16 வகை சத்துக்களில் பெரும்பாலான வற்றை ரசாயன உரங்களாகவே இட்டு வருவதால் சுற்றுச்சூழல் மாசு படுவதுடன், விவசாயிகளுக்கு நன்மை தரும் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் மற்றும் மண் புழுக்கள் கடுமையாக பாதிக்கின்றன. மேலும், விவசாயிகள் இடும் ராசாயன உரங்கள் 40 சதவீதம் மட்டுமே பயிருக்கு கிடைப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த இடர்பாடுகளை களையும் வகையில் சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாமல், உரச் செலவை குறைக்கும் விதமாக, வேளாண் துறை மூலம்தழைச்சத்தை அளிக்கும் அசோஸ்பைரில் லம் மற்றும் மணிச்சத்தை கரைத்து அளிக்கும் பாஸ்போபாக்டீரியம் ஆகிய வற்றை கலந்து ‘அசோஃபாஸ்’ என்ற கூட்டு உயிர் உரம், தயார் செய்து விவ சாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இது குறித்து கடலூர் வேளாண் இணை இயக்குநர் பாலசுப்ரமணியன் கூறுகையில், “கடலூர் உயிர் உர உற்பத்தி மையம் மூலம் தயாரிக்கப்படும் உயிர் உரங்கள் கடலூர், நாகை மற்றும் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இது பிற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். விவசாயிகள் 6 மாதங்கள் வரை இதை இருப்பு வைத்து பயன்படுத்தலாம்.

கடலூர் மாவட்ட விவசாயிகள் அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் இந்த திரவ உயிர் உரங்களை வாங்கி பயன்படுத்தலாம்” என்று தெரிவித்தார்.

கடலூர் வேளாண் உதவி இயக்குநர் பூவராகன் இதுபற்றி கூறுகையில், “ஒரு மில்லியில் 1 கோடி நுண்ணுயிர்கள் இருக்கும் வகையில் இந்த திரவ உயிர் உரங்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை கொண்டு விதை நேர்த்தி செய்யலாம்; நாற்றின் வேரை நனைத்து நடலாம்; நேரடியாக நடவு வயலில் தெளிக்கலாம்; சொட்டு நீர் பாசனம் மூலம் கலந்து நீர் வழி உரமாகவும் பயன்படுத்தலாம்’‘ என்றார்.

“இவற்றை பயன்படுத்துவதன் மூலம் பயிரின் வளர்ச்சி மேம்படும். பயிரின் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்தி மகசூல் 20 சதம் வரை அதிகரிக்க வாய்ப்புண்டு. மண் வளம் காத்து, குறைந்த செலவில் அதிக லாபம் அடைய முடியும். ஆனால், இந்த உயிர் உரங்களை ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளுடன் கலந்து பயன்படுத்தக் கூடாது’‘ என்று கடலூர் உயிர் உர உற்பத்தி மைய மூத்த வேளாண் அலுவலர் முகமது நிஜாம் தெரிவித்துள்ளார். பயனற்ற வேதி உரங்களைப் பயன்படுத்தி நிலத்தை மலடாக்குவதற்குப் பதில், இது போல பயனுள்ள உயிர் உரங்களை விவசாயிகள் பயன்படுத்த முன் வர வேண்டும். இதன் பயனை வேளாண் அதிகாரிகளும் ஊர்கள் தோறும் சென்று எடுத்துச் சொல்ல வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

50 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்