தேர்தல் விளம்பரங்களை ஒளிபரப்பு செய்ய உள்ளூர் தொலைக்காட்சிகளுக்கு கட்டுப்பாடு

By செய்திப்பிரிவு

உள்ளூர் தொலைக்காட்சியில் அனுமதியின்றி தேர்தல் விளம்பரங்களை ஒளிபரப்பினால் சட்ட ரீதி யான நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேபிள் ஆபரேட்டர்களுடன் சட்டப் பேரவை தேர்தலையொட்டி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்தார். கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு வேட்பாளர்களின் தேர்தல் செலவினத்தை கண்காணிக்க கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஊடகச் சான்ற ளிப்பு மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவால் வாக்குப்பதிவு நடக்கும் வரை, 24 மணி நேரமும் செயற்கைகோள் மற்றும் உள்ளூர் தொலைக்காட்சி சேனல்கள் கண்காணிக்கப் படும்.

உள்ளூர் கேபிள் தொலைக் காட்சிகளில் வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சிகள் தேர்தல் தொடர்பான விளம்பரங் களை, ஒளிபரப்பு செய்யும் முன்னர் ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்பு குழுவுக்கு விளம்பரம் குறித்த விவரங்கள் 2 நகல் களையும், விளம்பரம் தயாரிப்பு செலவினத் தொகை போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இதனை கண்காணிப்பு குழு பார்வையிட்டு ஊடகச்சான்று மற்றும் கண்காணிப்பு குழுத் தலைவரான மாவட்ட தேர்தல் அலுவலர் அதற்கான அனுமதியை வழங்குவார். உரிய அனுமதிபெறாமல் தேர்தல் விளம்பரங் களை ஒளிபரப்பினால் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும். இவ்வாறு ஆட்சியர் கூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ், தேர்தல் வட்டாட்சியர் ஜெயசங்கர், உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர்கள், கேபிள் ஆபரேட்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

க்ரைம்

6 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்