போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பேருந்துகள் இயக்கம்

By செய்திப்பிரிவு

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால் ஒருங் கிணைந்த வேலூர் மாவட்டத்தில் வழக்கம்போல் அரசுப்பேருந்துகள் நேற்று இயக்கப்பட்டன. இதனால், பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

அரசு போக்குவரத்துக்கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். ஓய்வூதிய பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் மாநிலம் முழுவதும் 80 சத வீதம் பேருந்துகள் இயக்கப்பட வில்லை. இதனால், பொதுமக்கள், வேலைக்கு செல்வோர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 80 சதவீத அரசுப்பேருந்துகள் இயக்கப்படவில்லை.வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து கிராமப் புறங்களுக்கு செல்லக்கூடிய அரசு நகர பேருந்துகள் முழுமையாக ரத்தானது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை போக்குவரத்து தொழிலாளர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக் கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத் தில் நேற்று முன்தினம் இரவு முதல் ஒரு சில வழித்தடங்களில் அரசுப் பேருந்துகள் மீண்டும் இயக்கப்பட்டன.

இந்நிலையில், நேற்று காலைமுதல் வழக்கம்போல் அனைத்து அரசுப் பேருந்துகளும் இயக்கப் பட்டன. வேலூர் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்களில் இருந்து அனைத்து வழித்தடங் களும் பேருந்துகள் இயக்கப் பட்டன.

குறிப்பாக, கிராம பகுதிகளுக்கு செல்ல கூடிய அரசுப் பேருந்து கள் சரியான நேரத்தில் இயக்கப் பட்டன. இதனால், கடந்த 3 நாட்களாக பெரும் அவதிக்குள்ளாகி வந்த பொது மக்கள் பேருந்துகள் இயக்கத்தால் மகிழ்ச்சியடைந் துள்ளனர். ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் இருந்தும் அரசுப் பேருந்துகள் அனைத்து பகுதிகளுக்கும் நேற்று முதல் இயக்கப்பட்டன.

இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, ‘‘ போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் உடனடியாக பணிக்கு திரும்பியுள்ளனர். இன்று (நேற்று) காலை முதல் வழக்கம் போல் அனைத்து பகுதிகளுக்கும் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

நாளைக்குள் (இன்று) 100 சதவீத பணியாளர்கள் பணிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

8 mins ago

தமிழகம்

2 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

38 mins ago

இந்தியா

32 mins ago

தமிழகம்

49 mins ago

வாழ்வியல்

40 mins ago

இந்தியா

54 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்